எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது- மனிதவள அமைச்சகம்

Monday, April 2, 2018


நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கல்லூரிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகின்றன. ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

கோவா ஐஐடியில் 62 சதவிகிதமும், கர்நாடக மாநிலம் தாராவாட் ஐஐடியில் 47 சதவிகிதமும், கோரக்பூர் ஐஐடியில் 46 சதவிகிதமும், கான்பூர் ஐஐடியில் 37 சதவிகிதமும், டெல்லி மற்றும் மும்பை ஐஐடியில் 27 சதவிகிதமும், சத்தீஸ்கரில் உள்ள ஐஐடியில் 58 சதவிகிதமும், சென்னை ஐஐடியில் 28 சதவிகிதமும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் தேவைக்கு அதிகமாக 4 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதுபோன்று, நாட்டிலுள்ள ஐஐடிகளில் மிக மோசமான இடத்தில் சத்தீஸ்கர் ஐஐடி இடம்பிடித்துள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிகளிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது

“ஐஐடி மற்றும் என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில், ஆசிரியர்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதற்கு தகுதிவாய்ந்த மற்றும் கிடைக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் உயர்வு இல்லை. 50 சதவிகித பட்டதாரிகள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர், எஞ்சியுள்ள பெரும்பாலானவர்கள் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். சம்பள உயர்வு மற்றும் மேற்படிப்புக்கான ஊக்குவித்தல் போன்ற காரணங்களிலும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது” எனக் கல்வி நிபுணர் சீதா ராமு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One