எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை

Tuesday, May 22, 2018

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 800 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாட்டுடன் கல்விப்பரிமாற்றம் குறித்து திட்டமிடும் நம் கல்வித்துறை, ஜப்பான் நாட்டில் கல்வி பயிலும் ஒரே ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக தனி தொடர்வண்டி வசதியை ஏற்பாடு செய்துகொடுத்த வரலாற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்..


10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்காமல், அப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றவற்றை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். புதிய குழுக்கள் மூலம் அப்பள்ளிகளுக்கு இன்னும் இரு ஆண்டுகள் கூடுதல் கால அவகாசம் மாணவர் சேர்க்கைக்காக கொடுங்கள். அப்பொழுதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அப்பொழுது பள்ளிகளை மூடி, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஏனெனில் 800 பள்ளிகளை மூடும் நடவடிக்கை என்பது ஏறத்தாழ 5000 க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கான எளிய வாய்ப்பை தடுப்பதாகவே கருத வேண்டும்.எனவே இந்த பள்ளிகள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் அதனை சிறப்புக்கவனத்திற்குரிய பள்ளிகளாக அறிவித்து, அவற்றை மேம்படுத்துவதை இந்த ஆண்டிற்கான இலக்காக அறிவிக்க வேண்டும்.

வாழுகின்ற பொழுது ஒரு மனிதனுக்கு குறைபாடு வந்தால் சரிசெய்ய வேண்டுமே தவிர, கொலை செய்தல் தீர்வாகாது.. பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு என்பது ஒரு குறைபாடு..
சரி செய்ய வேண்டுமே தவிர, பள்ளிகளைச் சாகடித்துவிடக் கூடாது.

நிச்சயமாக கல்வி அமைச்சர் அவர்களும், தமிழக அரசும் இதனைக் கருத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையினை முன்வைக்கிறேன்..

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One