எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாமல்லபுரம் சிறுமி வாழ்க்கை ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி

Wednesday, May 22, 2019


மாமல்லபுரம் சிறுமி, கமலியின், 'ஸ்கேட்டிங்' விளையாட்டுத் திறனும், குடும்ப சூழலும், குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப்படம், 'ஆஸ்கர்' விருது போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.மாமல்லபுரம், மீனவ பகுதியைச் சேர்ந்தவர், சுகந்தி, 30. கடற்கரைக்கோவில் பகுதியில், மீன் உணவு வியாபாரம் செய்கிறார். இவரது மகள் கமலி, 9; இவ்வூர், தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.சிறு வயதில், ஸ்கேட்டிங் பலகையை, விளையாட்டாக பயன்படுத்த துவங்கிய இவருக்கு, அதில் ஆர்வம் அதிகரித்தது. விடுமுறை நாட்களில், வீட்டின் அருகில், சுயமாக பயிற்சியில் ஈடுபட்டார்.மாமல்லபுரம் சுற்றுலா வந்த, சர்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர், ஜேமி தாமஸ், சிறுமியின் விளையாட்டை படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அது, உலகம் முழுதும், லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது.அந்த படத்தை பார்த்த, நியூசிலாந்து நாட்டின், ஷாஷா ரெயின்போ என்ற குறும்பட இயக்குனர், மாமல்லபுரம் வந்து, கமலியின் விளையாட்டுப் பயிற்சி, குடும்பம், வாழ்க்கைச் சூழல் குறித்து, 'கமலி' என்ற பெயரில், ஆவண குறும்படம் தயாரித்தார்.மும்பையில் நடந்த, சர்வதேச குறும்பட விழா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில், சிறந்த குறும்பட இயக்குனர் விருதை, இப்படம் பெற்றது. அடுத்த ஆண்டிற்கான, ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கும், இப்படம் தகுதி பெற்றுள்ளது.இது குறித்து, கமலி கூறும்போது, ''படிப்பில், ஸ்கேட்டிங்கில், கவனமாக உள்ளேன். ஸ்கேட்டிங் விளையாட்டில், உலக அளவில் சாதிக்க ஆசை. மற்றவர்கள், எனக்கு உதவ வேண்டும்,'' என்றார்.இவரின் தாய் சுகந்தி கூறியதாவது:பெற்றோருடன் வசிக்கிறேன். மீன் வறுவல் விற்கிறேன்; வருமானம் குறைவு தான்.இதில் தான், மகள், மகனை படிக்க வைக்கிறேன். கமலிக்கு, ஸ்கேட்டிங் ஆர்வம் அதிகம் உள்ளது. முடிந்த அளவுக்கு அவளை ஊக்குவிக்கிறோம். சிறந்த வீராங்கனையாக சாதிக்க, உறுதுணையாக இருப்போம். நிச்சயம் சாதிப்பாள். எங்கள் வாழ்க்கைப் படம், ஆஸ்கர் விருதுக்கு, தகுதி பெற்றது மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள: தாய்மாமன் சந்தோஷ் - 98407 37770.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One