எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலா - சட்டபேரவையில் அமைச்சர் அறிவிப்பு

Tuesday, July 16, 2019சட்டபேரவையில் நேற்று நடைபெற்ற சுற்றுலா துறை மானிய கோரிக்கை நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பின்பு சுற்றுலாத்துறை அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் :

 பள்ளி மாணாக்கர்களுக்கு சுற்றுலாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலா 32 மாவட்டத்தில் ரூ.64 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். 2019ம் ஆண்டு உலக சுற்றுலா தின விழாவினை சேலத்தில் கொண்டாட ரூ. 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். சுற்றுலா அலுவலக கட்டடங்களை அலுவலகங்களில் மொத்தம் 100 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் 14 அறைகள் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் உள்ள 10 அறைகள் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். உதகையில் உள்ள கூடுதல் படகு இல்லத்தில் இரண்டு பயோ கழிவறைகள் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One