எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எல்.இ.டி., திரையுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்'; தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

Tuesday, July 16, 2019


கரூர் அருகே, தனியார் பள்ளிக்கு இணையாக, அதிநவீன வசதிகளுடன், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஜெகதாபியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, கடந்தாண்டு, மாதிரி மேல்நிலைப் பள்ளியாக, பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தனியார் பள்ளிக்கு இணையாக, காஸ் இணைப்புடன், அறிவியல் ஆய்வகம், எல்.இ.டி., திரையுடன், ஐந்து ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளியை சுற்றிலும், 23, 'சிசிடிவி' கேமராக்கள், அனைத்து வகுப்பறைகளிலும், ஸ்பீக்கர் வசதி என, பள்ளியின் அமைப்பே, முற்றிலும் மாறியது.
இதுதவிர, 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி, நுாலக வசதி, யோகா, கராத்தே, நடன வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஒன்றாம் வகுப்புகளும், ஆங்கில வழிக்கல்வியில் துவங்கப்பட்டுள்ளன.

பள்ளி தலைமையாசிரியர் எஸ்.தீனதயாளன், 45, கூறியதாவது:கடந்த ஆண்டு, இப்பள்ளியில், 400 மாணவ - மாணவியர் படித்தனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் பெருகியதால், நடப்பாண்டு, மாணவர்கள் எண்ணிக்கை, 630 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், ஆங்கில வழியில், பிளஸ் 1 வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக, தமிழக அரசு, 1.36 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதில், ஆறு வகுப்பறைகள், ஒரு ஆய்வகம், இரண்டு நவீன கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. நடப்பாண்டு துவங்கப்பட்ட, எல்.கே.ஜி., வகுப்பில், 31 பேர், யு.கே.ஜி., வகுப்பில், 42 பேர், ஒன்றாம் வகுப்பில், 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக, புதிய கட்டடத்தில் விளையாட்டு உபகரணங்கள், எல்.இ.டி., திரைகள், மான்டிசோரி கல்வி உபகரணங்கள், பல வண்ண இருக்கை, மேஜைகள் போடப்பட்டுள்ளன.

தனி கழிப்பறை, பூங்கா கட்டும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதை உணர்ந்த பெற்றோர் பலர், தனியார் பள்ளியில் படித்த தங்கள் குழந்தைகளை, எங்கள் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், ஆறு முதல், பிளஸ் 2 வரை, 80 மாணவ - மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் கல்வியாண்டில், மாணவர்களின் எண்ணிக்கையை, 1,000மாக உயர்த்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One