எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வகுப்பறைக்கு வெளியேயும் வாழ்வியலோடு கணிதம் கற்பிக்கும் அரசுப்பள்ளி கணித ஆசிரியர்.

Sunday, July 14, 2019
சேலம் ஊரகம் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...நேற்று (12-7-19) கணித மன்ற துவக்க விழா நடைப்பெற்றது.

அது சமயம் பள்ளி தலைமை ஆசிரியர்  வாழ்க்கைக்கு கணிதம் மிக முக்கியம் என்றும் மாணவர்கள் அனைவரும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தலை சந்தேகமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்கள்...

பின்னர் 8 ஆம் வகுப்பு ( கௌதம், மாணவர்கள்  "நான் விரும்பும்  கணித மேதை" என்ற தலைப்பில்  கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றி பல அறிய தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் " எங்கும் கணிதம் எதிலும் கணிதம் " என்ற குறு நாடகம் நடித்து காட்டி நம் வாழ்வில் கணிதம் எப்படி பின்னி படர்ந்துள்ளது என்பதை நகைச்சுவை உணர்வோடு மாணவர்களுக்கு நடித்து காட்டினார்கள்....

பின்னர் எம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் ( அபர்ணா,) "உங்களுக்கு தெரியுமா ? "என்ற தலைப்பில் பல அறிய கணித தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்தார்கள்...

அடுத்த நிகழ்வாக எம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வினாடி வினா நடத்தி மாணவர்களின் கணித அறிவை சோதித்து அவர்களை உற்சாக படுத்தினார்கள்...

பின்னர்  எம் 8 ஆம் வகுப்பு மாணவிகள் "நொடி கணக்கு" என்ற தலைப்பில் (தீபா,     ) மாணவர்களிடம் மனகணக்கு போட்டு அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர்.

இறுதியாக மாணவ மாணவியர் கணித மன்ற தொடக்க விழாவில் கூறிய பல தகவல் தங்களுக்கு புதியனவாகவும், மகிழ்வு தருவதாக இருப்பதாகவும் தொடந்து வரும் வாரங்களில் தங்களின் பங்களிப்பு இருக்கும்  என்று கூறியது கணித ஆசிரியரான எனக்கு ( ஆ.சிவராமகிருஷ்ணன்) மிக்க மகிழ்ச்சி அளித்தது.

மிக்க அன்புடன்
ஆ.சிவராமகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
ஊ.ஒ.ந.நி.பள்ளி
சர்க்கார்கொல்லப்பட்டி
சேலம் ஊரகம்.
சேலம்.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One