எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில் 144 கோடி செலவில் 250 கி.மீ.க்கு சுற்றுச்சுவர்: நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

Sunday, September 8, 2019
தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோமீட்டர் நீளத்துக்கு 144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.


அதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளுக்காக 144 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுக்குறித்து தமிழக அரசின் அரசாணையில் கூறியதாவது, பள்ளிகளை சுற்றி சுற்றுச்சுவர்கள் கட்டுவதன் மூலம் பள்ளிகளுக்குள் அன்னியர் நுழைவதை தடுக்க முடியும். அதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும், குறிப்பாக பெண் மாணவிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யபப்டும் என்றும், அவர்கள் அச்சமின்றி படிப்பை தொடர வழி வகுக்கும். கலவரம், வெள்ளம் ஆகியவற்றில் இருந்து பள்ளியை காக்க முடியும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One