எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்க்கு பொதுத்தேர்வு! தமிழகத்திற்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு! அமைச்சர் தகவல்!

Saturday, September 14, 2019




மத்திய அரசானது வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையில் பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என அறிவித்தார். இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து கருது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, ' 5 முதல் 8ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அறிவிப்பை மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த பொதுத்தேர்வு 3 ஆண்டுகள் கழித்து தான் முழுமையாக அமல்படுத்தப்படும். எனவும்,

8 வகுப்பு வரை படித்த மாணவர்களால் அரசு வேலைக்கான பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள தயங்குகிறார்கள், நேரடியாக 10 ஆம் வகுப்பில் பொது தேர்வு சந்திக்கும்போது அவர்களுக்கு பதட்டம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கவே 5 மற்றும் 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் 3 வருடங்களுக்கு பிறகுதான் அந்த தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One