எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு

Monday, September 16, 2019
தமிழகத்தில் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 2011-12-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமையாசிரியர் மற்றும் 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம் 1,000 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்தப் பணியிடங்களுக்கு கடைசியாக 2018-ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்பு நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து பணிநீட்டிப்பு காலம் 2021-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One