எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தனியார் பள்ளிகள் ஆரம்பிக்க இனி கெடுபிடி அதிகம்- அமைச்சர் செங்கோட்டையன்

Friday, September 6, 2019




தீவிர பரிசீலனைக்கு பிறகே இனி தனியார் பள்ளிகள் திறக்க அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இதில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 377 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பின்லாந்தில் பல்வேறு இடங்களில் சென்று ஆராய்ந்தோம். அங்குள்ள ஆசிரியர்களை தமிழகத்துக்கு வரவழைத்து பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் தீவிர பரிசீலனைக்கு பிறகே தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்படும்' என்றார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட் முறையில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One