எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அஞ்சல் துறையில் மாணவர்களுக்கு சேமிப்பு திட்டம் அறிமுகம்

Monday, September 2, 2019


குழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், வித்தியாசமான திட்டத்தை அஞ்சல் துறையினர், நேற்று, அறிமுகப்படுத்தினர்.அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள், தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன. செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொன் மகன் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள், தற்போது நடைமுறையில் உள்ளன.இத்திட்டங்களின் படி, பெற்றோர் தங்கள் மகன், மகள் பெயரில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கி பணம் செலுத்தி சேமிக்கலாம்.இந்நிலையில், தற்போது, குழந்தைகளுக்கு நேரடியாக சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தபால் பெட்டி வடிவிலான, அழகிய உண்டியல் ஒன்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதில், இரு சாவிகள் உள்ளன. இத்திட்டத்தில் இணையும் குழந்தைகள், 100 ரூபாய் செலுத்தி திட்டத்தில் இணையும்போது, சேமிப்புக் கணக்கு புத்தகம் மற்றும் இந்த மணி பாக்ஸ் எனப்படும் உண்டியல் வழங்கப்படும்.குழந்தைகள் இந்த உண்டியலில் பணத்தை சேமித்து, அது நிரம்பியதும், தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரை வீட்டுக்கு வரவழைத்து அந்த உண்டியல் பணத்தை, சேமிப்புக் கணக்கில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வயத்துக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளும், இதில், இணையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One