எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதுமைகள் படைக்கும் மாணவர்களுக்கான ஓர் "அறிவியல் திருவிழா"

Saturday, September 14, 2019




வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் *‘நாளைய விஞ்ஞானி’*

✍🏻 யார் பங்கேற்கலாம்..?

👉 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.

👉 9, 10-ம் வகுப்பு தமிழ் வழி, 9, 10-ம் வகுப்பு ஆங்கில வழி, 11, 12-ம் வகுப்பு தமிழ் வழி, 11, 12-ம் வகுப்பு ஆங்கில வழி என நான்கு தனித்தனி அமர்வுகள் நடைபெறும்.

👉 கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட மாநாட்டில் பங்குபெற்ற ஆய்வுக்கட்டுரைகளும்,* அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட Science Model ஆய்வறிக்கையாக தொகுத்து சமர்பிக்கலாம்.


✍🏻 என்ன செய்ய வேண்டும்..?

👉 மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும்.

👉 அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

👉 கூர்ந்து நோக்குதல், மக்களிடம் கருத்து கேட்டு, தகவல்களை திரட்டுதல், பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தல் போன்ற பல அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

👉 இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு அறிக்கையாக தயாரிக்க வேண்டும்.

👉 ஆய்வின் தலைப்பு, ஆய்வுத் திட்டத்தின் நோக்கம், பிரச்சினைகளைக் கண்டறிய பயன்படுத்திய அறிவியல் வழிமுறை, பிரச்சினைகளின் பட்டியல், காரணங்கள், தீர்வுகள், தீர்வுகளை அமல்படுத்திய விதம் போன்ற விவரங்களை A4 அளவு பேப்பரில் டைப் செய்ய வேண்டும்.

👉 தங்கள் ஆய்வை விவரிக்க புகைப்படங்கள் (Images), வரைபடங்கள் (Graphs) போன்றவற்றை இணைக்கலாம்.

👉 ஆய்வுக் கட்டுரையாகத் தொகுத்து, பைண்டிங் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

✍🏻 எப்போது சமர்ப்பிக்க வேண்டும்..?

👉 மாணவர்கள் தாங்கள் தொகுத்த ஆய்வுக் கட்டுரையின் ஒரு பிரதியை அருகில் உள்ள இந்து தமிழ் திசை அலுவலகம் அல்லது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

✍🏻 மண்டல அறிவியல் திருவிழாக்கள் :

👉 மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மண்டல அறிவியல் திருவிழாவுக்கு அழைக்கப்படுவார்க.

👉அக்டோபர் 12, 13 ஆகிய இரண்டு தினங்களில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய 4 இடங்களில் மண்டல அறிவியல் திருவிழாக்கள் நடைபெறும்.

✍🏻 மண்டல அறிவியல் திருவிழாவில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

👉 மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வில், தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து சுமார் 8 நிமிடங்கள் உரை நிகழ்த்த வேண்டும்.

👉 அப்போது நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

👉 அவ்வாறு உரை நிகழ்த்தும்போது, தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பிரச்சினையில் மக்களுக்கு உதவும் வகையில், மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த கருவிகளை காட்சிப்படுத்தலாம்.

✍🏻 மாநில அறிவியல் திருவிழா :

👉 மண்டல அறிவியல் திருவிழாவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மாநில அறிவியல் திருவிழாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

👉 மாநில அளவிலான அறிவியல் திருவிழா அக்டோபர் 20-ம் தேதி வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வளாகத்தில் நடைபெறும்.

👉 அங்கு விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் நேரிடையாக உரையாடலாம்.

✍🏻 ஒரு குழுவில் எத்தனை பேர்..?

👉 ஒரு ஆய்வுக் குழுவில் 3 முதல் 5 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு ஆசிரியரும் இருக்கலாம்.

👉 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One