எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

School Morning Prayer Activities -09-09-2019

Sunday, September 8, 2019


*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

09-09-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்- 664*

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
 சொல்லிய வண்ணம் செயல்.

மு.வ உரை:

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

கருணாநிதி  உரை:

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

சாலமன் பாப்பையா உரை:

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*
நமது வாழ்க்கையில் முக்கிய நோக்கம் நாம் செய்யும் தொழிலில் முன்னேறிச் செல்வதே ஆகும்.

   - அப்துல் கலாம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Back முதுகு

 Belly தொப்பை

 Stomach வயிறு, இரைப்பை

 Abdomen அடிவயிறு

 Eyeball கண்ணின் கருமணி

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி மற்றும் விளக்கம்*

*உங்கள் உறவிலே வேகிறதைவிடஇ ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்* .

நாம் அறிந்த விளக்கம் :

சுற்றமும் நட்பும் தாங்க முடியாத தொல்லைகள் ஆகும் போது பாதிக்கப்பட்டவன் சொன்னதுஇ உங்கள் உறவைவிட மரணமே மேல் என்று. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) ஜப்பான் நாட்டின் நாணயம் ?

*யென்*

2.) இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது?

*கர்நாடகம்*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. குண்டு சட்டியில் கெண்டை மீன். அது என்ன?

*நாக்கு*

2. கூட்டுக்குள் குடியிருக்கும், குருவி அல்ல ! கொலை செய்யும், பாயும், அது வீரனும் அல்ல! அது என்ன?

*அம்பு*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*செய்நன்றி மறவேல்*

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்.

🔮ராமநாதபுரத்தில் நாளை முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு.

🔮திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் 3,000 கன அடி நீர் திறப்பு; சுற்றுலா மையம் மூடல்.

🔮தமிழகம் உள்பட நாடு முழுவதும் 75 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி தகவல்.

🔮மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🔮அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா.

🔮Chandrayaan 2 | Vikram lander located on lunar surface: ISRO chairman.

🔮India is now capable of challenging any challenge, says Narendra Modi.

🔮Tamilisai Soundararajan takes over as Telangana Governor.

🔮Flood alert issued in delta districts as Mettur brims.

🔮150-year-old idol found by locals at Sivadi.

🔮US Open: Bianca Andreescu overcomes Serena Williams to win U.S. Open.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One