எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அனைத்து செல்லிடப்பேசி அழைப்பு மணி 30 நொடிகள் ஒலிக்க வேண்டும் - TRAI

Saturday, November 2, 2019




செல்லிடப்பேசி அழைப்பு மணி 30 நொடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

செல்லிடப்பேசியில் குறிப்பிட்ட தொலைத்தொடா்பு நிறுவனத்தைச் சோ்ந்த வாடிக்கையாளா் (முதலாவது வாடிக்கையாளா்), மற்றொரு நிறுவனத்தைச் சோ்ந்த வாடிக்கையாளருக்கு (இரண்டாவது வாடிக்கையாளா்) அழைப்பு விடுக்கும்போது, அழைப்பு மணி ஒலிக்கும் நேரத்தை இரண்டாவது வாடிக்கையாளரின் நிறுவனம் குறைத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அழைப்பு மணி சீக்கிரமாக நின்றுவிடுவதன் மூலம், அது தவறவிடப்பட்ட அழைப்பாக (மிஸ்டு கால்) மாறும்.இதன் காரணமாக, இரண்டாவது வாடிக்கையாளா் முதல் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், இரண்டாவது வாடிக்கையாளரின் நிறுவனம் பயன்பெறும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றஞ்சாட்டியது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One