எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சகா சாதனை: 20 பந்தில் 102 ரன்

Saturday, March 24, 2018


கோல்கட்டா: உள்ளூர் கிளப் 'டுவென்டி-20' போட்டியில், 20 பந்தில் 102 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்தார் சகா.

மேற்கு வங்கத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான ('கிளப்') 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் மோகன் பகான், நாக்பூர் ரயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ரயில்வேஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து மோகன் பகான் அணிக்கு சகா, கேப்டன் சுபோமாய் தாஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. சகா, சிக்சர் மழை பொழிந்தார்.

அமான் பிரோசத் வீசிய ஒரு ஓவரில், 6 பந்தில், 6 சிக்சர் விளாசினார். இவர், 20 பந்தில், 14 சிக்சர், 4 பவுண்டரியுடன், சதம் அடிக்க, மோகன் பகான் அணி, 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சகா (102 ரன், 20 பந்து, 'ஸ்டிரைக் ரேட்' 510), சுபோமாய் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

டெஸ்ட் வீரர்

மேற்குவங்கத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் சகா, 33. ஐ.பி.எல்., தொடரில் சென்னை, கோல்கட்டா, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடி, 107 போட்டிகளில் 1557 ரன்கள் எடுத்தார். உள்ளூர் அளவில் 164 'டுவென்டி-20' போட்டிகளில் 2718 ரன்கள் எடுத்தார்.

ஐ.பி.எல்., பைனல் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீரர் சகா (2014ல்) தான். எனினும், இவரது அணி கோப்பை வெல்லவில்லை. இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் தான் இவருக்கு இடம் கிடைக்கிறது.

நல்ல பயிற்சி

வரும் சீசனில் ஐதராபாத் அணிக்காக (ரூ. 5 கோடி) களமிறங்க உள்ளார். இதற்கான பயிற்சிக்காக இத்தொடரில் களமிறங்கினார். சகா கூறுகையில்,'' முதல் பந்து பேட்டிங் நடுவில் பட்டு, சிக்சராக சென்றது. உடனே இப்போட்டி முழுவதும் நன்கு விளையாடலாம் என முடிவு செய்து விளாசினேன். 20 பந்தில் சதம் அடித்தது, சாதனையா, இல்லையா எனத் தெரியாது. ஐ.பி.எல்., தொடர் வரவுள்ளதால், பல்வேறு 'ஸ்டைலில்' பேட்டிங் செய்து பார்த்தேன்,'' என்றார்.

கெய்ல் வழியில்

'டுவென்டி-20' கிரிக்கெட்டை பொறுத்தவரையில், அங்கீகரிக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடரில், புனே அணிக்கு எதிராக, பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல், 30 பந்துகளில் சதம் (2013) அடித்தது தான் சாதனையாக உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சகா, 20 பந்துகளில் 102 ரன்கள் குவித்தது சாதனையாகி உள்ளது. இதற்கு முன், 2016ல் டுபாகோ கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில், ஈராக் தாமஸ் (31 பந்தில், 131 ரன்) என்ற வீரர், 21 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One