எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2018-19ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் உடனுக்குடன்!

Thursday, March 15, 2018சென்னை: வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முன்னதாக முதல்வர் பழனிசாமியும், நிதிநிலை அறிக்கையுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரை அவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே உடனுக்குடன் வழங்கப்படும்:

***

12.08: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலத்திட்டங்களுக்கு ரூ.109.42 கோடி ஒதுக்கீடு.

சமூக நலத்துறைக்கு ரூ.5,611 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.988 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.973 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ.15 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.

ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.

•••

12.02: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் தொழில் செய்வதை எளிமைப்படுத்த ஒருங்கிணைந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற சாலைத் திட்டப் பணிகளுக்கு ரூ.1,244 கோடி நிதி ஒதுக்கீடு.

அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறை

கடந்த 2017-18ம ஆண்டில் ரூ.10,067 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.11,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட ரூ.1,006 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

முதலீட்டு மானியம் ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

***

11.55: உதய் திட்டத்துக்கான கடனை சரிகட்ட மின்சார வாரியத்துக்கு தமிழக அரசால் ரூ.4,563 கோடி மானியம் வழங்கப்படும்.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீடு.

***

11.48: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.

54 கி.மீ. மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ. மாவட்ட சாலைகள் ரூ.80 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.

***

11.38: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.

மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One