எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பூச்சி அருங்காட்சியங்கள் உதவும் - முதல்வர்

Tuesday, March 27, 2018


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூச்சி அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திங்கள்கிழமை (இன்று) திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் உரையாற்றிய அவர்,

இந்த அருங்காட்சியகத்தை விடியோ கான்பிரன்ஸிங் முறையில் திறந்து வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நேரில் வந்து பார்த்து திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இங்கு வந்து பார்த்ததால் தான் இதன் சிறப்பம்சங்களை நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் பூச்சிகள் இருப்பதாக இந்த அருங்காட்சியகத்திற்கு வந்ததால் தெரிந்து கொள்ள முடிகிறது.

நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.

உலக அளவில் பூச்சிகள் குறித்து இது போன்ற அருங்காட்சியகங்கள் 20 இடங்களில் மட்டும் இருக்கிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அருங்காட்சியகம் தத்ரூபமாக அமைந்துள்ளது.

பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், அவற்றினால் வரும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு எந்த மருந்துகள் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சிகம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் வேளாண்மை மாணவர்களும், பள்ளி மாணவர்களும் தன் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த அருங்காட்சியம் உதவும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One