எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

Saturday, March 24, 2018

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
 கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்? இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் 100 சதவீத மாணவர்கள் தேர்வடைய வேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?
 மாணவர்களின் கல்வித் தரம் உயர அனைத்துப் பாடங்களுக்கும், தனித் தனியாக பாடம் வாரியாக ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One