எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக கொண்டாடிய ஆண்டுவிழா

Wednesday, March 28, 2018



மாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 27.03.2018 நேற்று பள்ளி ஆண்டுவிழா ஊர் கூடி குழந்தைகள் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருப்பதி, வட்டார வள மைய பொறுப்பு மேற்ப்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு ஒன்றிய ஆசிரியர் ஹரிஹரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமையாசிரியர் சேகர் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.



பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அடுத்த கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 4 மாணவர்கள்  விழா மேடையிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டன. அந்த மாணவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருப்பதி, மாதேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் புரவலராக சேர்ந்த பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டி, கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், பொம்மலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிராம  பொதுமக்களின் சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. மாதனூர் ஒன்றிய பள்ளித் தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணி, ஞானசெல்வி, சகுந்தலா, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, குணசேகரன், பாரதி மற்றும் ஆசிரியர்கள் கங்கோஜி, மகேந்திரன், விமல்நாதன், சக்திவேல், செந்தில், சிவசங்கர், ரபி, அருள்தாஸ், விநாயகம், ராஜேந்திரன், குபேந்திரன், இளமதி, ஹேமா  மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சசிகுமார், பிரசாத், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




விழாவில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஆசிரியை ரேவதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியைகள் கேசலட்சுமி, ஷர்மிளா, கோமதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்தனர். ஆசிரியை நளினசங்கரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One