எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Phoetic English Video- Unit 11

Thursday, March 29, 2018


பீட்சா படம் எடுத்த வீட்டுக்குப் பக்கத்துப் பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர் தான் சாந்தி ஜெயராணி டீச்சர்.இவுங்க நற்பெயருக்கு இந்த வீடு location free யா shooting பண்ணக் கிடைச்சது. இந்த  Unit - 11 லயும் அவுங்க தான் class எடுத்துருக்காங்க.

Shooting spotல ஒரு இரண்டு மாதத்துக்குப் பிறகு மதிய சாப்பாடு கட்டுபிடியாகல.காலை 6 மணிக்கே கிளம்பி வர்ற ஏழைப் பிள்ளைங்க மதிய சாப்பாடு கொண்டு வர முடியாத நிலை.

எல்லாத்தையும் சாந்தி டீச்சர் அவுங்க உடன் பிறவா தோழிகள் 2 பேரோட சேந்து  கஷ்டப் பட்டு சமாளிச்சாங்க.Technicians அப்புறம் நான் உட்பட சாப்பாடுக் கஷ்டம் இல்லாம  பாத்துகிட்ட தாய் இவுங்க தான்.

ஆறு மாசமா நாங்க மதியம் சாப்பிடுற வரைக்கும் கூடவே நின்னு பரிமாறிட்டு அதுக்கப்புறம் தான் சாப்பிடவே போவாங்க.அனாதையா வீடு,சொந்தமெல்லாம் விட்டுட்டு இந்த CD க்காக உழைச்ச எங்க எல்லாத்துக்குமே அம்மாவா கரிசனம் காட்டுனாங்க.
எல்லாமே தியாகம் மட்டும் தான்.இத நான் இங்க சொல்லலைன்னா செஞ்சோற்றுக் கடன் பட்டவனாயிருவேன்.

ரொம்பவும் அமைதியான டைப்.அதிர்ந்தே பேச மாட்டாங்க.ஒரு சின்ன பிரச்சனை கூட வரவிடாம பாத்துகிட்டாங்க.camera முன்னால் Class எடுக்க ரெம்பவே யோசிச்சாங்க.நல்லா வரலைனா வேற ஆள வச்சு எடுத்துக்கங்கன்னு சொல்லிப் பாத்தாங்க.விட்டுருவோமா என்ன.களத்துல இறக்கி விட்டுட்டோம்ல.

ஒரு சராசரிப் பெண் ஆசிரியரா  இருந்து, இந்த மாதிரி மீடியாவுல நடிச்சா வீட்ல மொத permission குடுக்கணும்.பட்டு saree கட்டுனாலும் அலட்டுறான்னு விமர்சனம்,சாதாரண saree கட்டுனா ஏன் இப்புடி match இல்லண்ணு விமர்சனம்.கூட வேலை பாக்குற சக டீச்சர்ங்க கிண்டலுக்கு பயந்தே பல பேர் வர்றதேயில்ல. முன்னாடி பேசிட்டாக் கூட பரவாயில்ல.பின்னாடி பேசுறதக் கேக்குறதுக்குத் தான் அம்புட்டு பயமே.அப்பறம் வீடு, குழந்தைகள், நல்லது கெட்டது அம்புட்டயும் பாக்கணும்.கைக் காசும் செலவழிக்கணும்னா யார் வருவா.

ஆனால் இவர்கள் வந்தார்கள். இன்று ஒவ்வொரு பள்ளியின் ஆங்கிலம் கற்றலின் விடிவெள்ளியாய் ஒளிர்கிறார்கள்.

இவுங்க தியாகத்துக்கும், தாயுள்ளத்துக்கும் ஒரு சல்யூட்டப் போடுங்க.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One