எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET,-பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தல்

Sunday, March 25, 2018


பாடப்பிரிவு அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக  அரசு அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில் தகுதித்தேர்வு  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத வகையில் வினாக்கள் இருந்தன.

தாள் 2 பட்டதாரி  ஆசிரியர்களுக்கான தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். இந்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி, கணிதம்,  அறிவியல் (அ) சமூக அறிவியல் என 5 வகையாக பிரித்து ஒரு பிரிவிற்கு 30 மதிப்பெண் அளிக்கின்றனர். எந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து  பட்டப்படிப்பு முடித்தனரோ அதிலிருந்து வெறும் 30 கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது.

2012 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் கணித பாடத்திலிருந்து 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. இதனால் கணித ஆசிரியர்கள்  பாதிக்கப்பட்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110 கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து கேட்கப்படுகிறது.

எஞ்சியவை  மட்டுமே பொதுவான வினாவாக கேட்கப்படும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில்  நடத்த  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் கூறுகையில், ‘‘ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா  இல்லையா என முடிவு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான் நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள் கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள்  அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.        

4 comments

 1. பட்டதாரி ஆசிரியர் என்பவர் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியராக இருப்பவர். 8ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் நல்ல முறையில் அறிந்துருந்தால் மட்டுமே மாணவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கூற முடியும் இல்லையேல் டீச்சர் க்கு ஒன்னும் தெரியல என்று கூறுவான்.
  அவன் சிறுவன் அவனுக்கு தெரியாது நாம் நம் துறையில் மட்டுமே வல்லுநர் என்று.

  அவனை பொறுத்த வரை ஆசிரியர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்துருப்பான்
  அதனாலேயே அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் இவ்வாறு ஒரு பாட திட்டங்களை வைத்துள்ளது

  ReplyDelete
 2. சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் ஏன் 60 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

  ReplyDelete
 3. சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் ஏன் 60 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

  ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One