எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியின் செயல்பாடுகளை முழுமையாக ஒளிபரப்பு செய்த திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1 "உங்களோடு நாங்க" நிகழ்ச்சி

Monday, April 9, 2018


பட்டாம்பூச்சிச் சிறகு
பறந்தால் மட்டும் அழகு
தொட்டுப்பிடிக்க நினைத்தால்
தூள் தூளாகும் விலகு....என்ற பாடல் வரிகள்  பறக்கும் பட்டாம் பூச்சியைப் பிடிக்க நினைத்தால் ......தேர்வு,படிப்புஎன்பதையும் தாண்டி இன்று பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்........................திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1  இன்று எங்கள் பள்ளியில் ......உங்களோடு நாங்க நிகழ்வு(6/4/2018)...மழலையர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வானொலி  நிலையம் சென்ற எங்களுக்கு ,”உங்களோடு நாங்க “.என்ற நிகழ்வுக்கு வானொலி நிலையம் எங்கள் பள்ளியை நோக்கி .....அட்டகாசமான வரவேற்பு ...தாங்கள் கூறும் கதை , பாடல் , நேரடியாக ஒலிபரப்புவதைக்கேட்டவுடன்  அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,ஐயாகூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்திரு மருத நாயகம்  அவர்கள் பள்ளியின் கல்விச்செயல்பாடுகளை விளக்க , நேரடி ஒலி பரப்பு ஆரம்பமானது ......... அடுத்து குழந்தைகளின் மழலைப்பேச்சு,அடுத்து அவர்களுக்கு பிடித்தமான பாடல் ......இடையிடையே பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பூ.ஜெயந்தி அவர்கள் பள்ளியின் வளர்ச்சி பற்றிய பேச்சு

அடுத்து SSAமேற்பார்வையாளர் திரு துரைப்பாண்டியன்  அவர்கள் பள்ளிகளுக்கு Ssa  செய்யும் திட்டங்கள் ,ஆசிரியர் பயிற்றுநர் திரு மணிமாறன அவர்கள்  பள்ளியின் சேர்க்கை  பற்றிய விபரங்களின்  ஒலிபரப்பு ,அடுத்து ஆசிரியர் ஹ.புஷ்பலதா அவர்கள் பள்ளியின் திட்டங்கள் பற்றி கூறிய ஒலி பரப்பு மற்றும் குழந்தைகளின் தனித்திறமைகள் நேரடி ஒலி பரப்பு என்று 1 மணி நேரம்   பள்ளிக்குள்ளே   ரெயின்போ பண்பலையின்102.1   திருவிழாவாக இருந்தது ...பள்ளியின் செயல்பாடுகள் ,பள்ளியின் வளர்ச்சி ,சத்துணவு ,மற்றும் 1,2,3 வகுப்புகளில்  மாணவச்செல்வங்கள் Pedagogy. கைக்கணினிக்கொண்டு கற்றலை எவ்வாறு வலுப்படுத்துவது,மொத்த மாணவர்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் நேரடியாக ஒலி பரப்பிய வானவில் பண்பலைக்கு நன்றி ..நன்றி ......,நன்றி

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One