எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

Thursday, April 26, 2018

பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில்நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம், உடை உணவுஎன அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 2104-2015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு, உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார்.இதையடுத்து, மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிம்னறம், பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது. இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு, சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2014-15ம் ஆண்டுக்கான உணவு, புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One