எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

Monday, April 23, 2018

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (ஜூன் 2018) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 4-ம்தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.எனவே, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஏற்கெனவேதேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வரும் ஏப்ரல் 23, 24-ம் தேதிகளில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.10, மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூ.100, இரண்டாம் ஆண்டு ரூ.100, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000, சேவைக் கட்டணம் ரூ.5, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24-ம்தேதி (நாளை) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One