எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கோடையில் குழந்தைகளை குளிர்வித்த துபாய் பொறியாளர் திரு .இரவி சொக்கலிங்கம். அவர்கள்

Friday, April 20, 2018

கோடை குளிர்ந்தது
கொடைக்கரம் தந்த பனிக்கூழால்!
குழந்தைகள் மகிழ்ந்தனர்
கூடவே வந்த பழக்கலவையாய்!
அனைவருக்கும் அளித்த அன்பு உள்ளம் திரு
இரவி சொக்கலிங்கத்திற்கு
அன்னைதமிழ் நன்றிகள்.


மாநிலம் முழுதிருந்தும்
மாணவரைத் தெரிந்தெடுத்து
பரிசினைஅளித்திடவேப்
பாச நெஞ்சம் நினைத்ததுவே!
அரசுப் பள்ளியிலே
அசத்தும் பிள்ளைகளில்
முதலிடம் பெறுவோர்க்கு
முன்வந்து பரிசளிக்கும்
முத்தானத் திட்டமிது
முதன்முறை அரங்கேற்றம்!
18 மாவட்டங்களில் 
42 பள்ளிகளில்                        600 மாணவ/ மாணவிகள் 
கல்வியில் முதலிடம் காண்போருக்குப் பரிசுமழை!
சர்வீஸ் டூ சொசைட்டி மூலம்
சகலரையும் உயர்த்தும் உள்ளங்கள் திரு இரவி
 சொக்கலிங்கம் ...................திரு இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்
தமிழகப் பள்ளிகளுக்கு
தாய்வீட்டுச் சீர்
தந்திடவே வருகிறார்கள்.
தலை தாழ்த்தி வணங்குகிறேன்......ஐயா .......

மணிகண்டம் ஒன்றியம் ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டி புதூர்


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One