எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கிருஷ்ணகிரியில் ஏசி வெடித்து விபத்து : அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு

Sunday, April 22, 2018

கிருஷ்ணகிரியில்ஏசி வெடித்ததில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. கிருஷ்ணகிரி சாந்தி நகரை சேர்ந்த ஆல்பர்ட் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஞ்சலா மேரி கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கும் போது ஏசி பயன்படுத்தயுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் ஆல்பர்ட் மட்டும் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி அஞ்சலா மேரி தனியாக வீட்டில் தூங்கிக்கொண்றிருந்தார்.

அப்போது  நடைப்பயிற்சி முடிந்து ஆல்பர்ட் மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் படுக்கை அறையில் புகை மூட்டம் அதிக அளவில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ஏசி வெடித்து தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. அதில் வெளியேறிய புகை மூட்டத்தால் அஞ்சலா மேரி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏசி தொழில் நுட்ப வல்லுநர்களிடம் இது தொடர்பாக போலீசார் அறிக்கை கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One