எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எது ஆசிரியர்களுக்கு அழகு? Phonetic Video Unit 17

Thursday, April 26, 2018


எது ஆசிரியர்க்கழகு?

ஆசிரியர்களிடம் குழந்தைகள் பாசப்படுவதும்,கவன ஈர்ப்பில் ஐக்கியப்படுவதும், அணுகு முறையில் ஒன்றிணைவதும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வைத்து மட்டுமே தவிர பணம்,புற அழகு,செல்வாக்கு போன்ற எதை வைத்தும் அல்ல.ஆசிரியர்களின் அலாதிப் பிரியம் ஒன்றே பிஞ்சுக் குழந்தைகளை வசீகரிக்க முடியும்.அந்த கொள்ளை கொள்ளும் வெள்ளை மனங்களில், செயலால் ஈர்க்கப்பட்ட  ஆசிரியர் மட்டுமே தேவதையாக,ஹீரோவாக குழந்தைகளால் பார்க்கப் படக் கூடும்.Phonetic 17 வது Unit எடுக்கும் சிவா என்ற சிவகாமி டீச்சரும் மாணவ நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் உயர்திணை ஒற்றை தீபம்.எதையும் கடமைக்குச் செய்யாமல் கடமையாகச் செய்யும் சுழல் விளக்கு.பிடித்தம்,பிடிமானம் அலாதியாகக் கிடைக்கும் மாணவர்களின் நேசக் களஞ்சியம் இவர்.

அனைத்து செயல்பாடுகளிலும் நீக்கமற தன்னை இணைத்துக் கொண்ட இவரின் செயலூக்கம் போற்றுதற்குரியது.குழந்தைகளும்,,Unitல் உள்ளவர்களும் சாப்பிட்ட பிறகு, இருந்தால் மட்டுமே சாப்பிடும் தாயின் கரிசனம் இவரது மாண்பு.

எல்லாவற்றிலும் ஆர்வப்பட்ட இவர் நடிப்பு,கேமரா என்றவுடன் ஓரடி பின் வைத்தார்."சார்..நல்ல அழகா, சின்ன வயசா இருக்குறவங்கள நடிக்க வைங்க.மத்த வேலை எதுனாலும் செய்யுறேன்,நடிப்பு மட்டும் ஆகாது" என்று விலகி நிற்க முனைந்தார்.நாம யாரும் நடிகர்கள் அல்ல,நடிப்பதும் சினிமா அல்ல.ஆசிரியர்கள் நாம் தான் நல்ல விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற பல்வகை ஆற்றுப் படுத்தலில் தான் சரியென்று ஒத்துக் கொண்டார்.

தனக்குரிய பகுதிக்கென மெனக்கெட்டார்.தயங்கினாலும் தன்னையே தயார்படுத்திக் கொண்டு,பிறர் என்ன எண்ணுவார்களோ என்பதை தூக்கியெறிந்து மாணவர்களின் நலனுக்காக இந்த unit ஐ சிறப்பாக்கினார்.

இதில் உள்ள பாடல் கூட பீட்ஸா படம் எடுத்த பங்களாவில் தான் இவரது ஒத்துழைப்போடு படமாக்கப்பட்டது.

மாணவர்களுக்காக உழைக்கும் இவரது நல்லுள்ளத்தின் பிரதிபலன் தான் இவரது மகளை MBBS மருத்துவராக்கியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

மாணவர்களுக்காகவே அர்ப்பணித்து வாழும் அழகிய அகத்தோற்றம் தான் மாணவர்கள் விரும்பும் அழகியல் என்பதை செயல்பாடுகளால் விதைத்து வரும் இந்த சிவகாமி ஆசிரியர் நலம் சூழ வாழ நாமும் வாழ்த்துவோம்.நண்பர்களுக்கும் பகிர்ந்து நல்லதை நானிலம் உணர்த்துவோம்.

Video


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One