எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நம்மாழ்வார் விருது பெற்ற ஆசிரியர்.

Wednesday, May 23, 2018


தேசிய நெல் திருவிழா:                               ஆண்டு தோறும் தேசிய நெல் திருவிழா நெல்லைக்காப்போம் என்ற உயரிய நோக்கில் நடைபெற்று வருகின்றது. 21.05.2018 மற்றும் 22.05.2018 ஆகிய இரண்டு நாட்களும் 12 ஆவது தேசிய நெல் திருவிழா திரு. நெல்.ஜெயராமன் அவர்களது முயற்சியால் நடைபெற்றது.                                                             இந்நெல் திருவிழாவில் பாரம்பரியமாக வைத்திருக்கும் சிறப்பு ரக நூல்கள் விதை நெல்லாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இயற்கை விவசாயம், இயற்கையான சூழலில் கிடைக்கக்கூடிய மருந்துகள் ,வேளாண்மை பொருட்கள் ஆகியவற்றின் கண்காட்சியும் நடைபெற்றது.                                    இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழக அளவில் வேளாண்மையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரக்கூடிய 20 பேருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் செ.மணிமாறன் அவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையில் விழிப்புணர்வை தொடர்ந்தது ஏற்படுத்தி வருவதனால் இந் நிகழ்வில் நம்மாழ்வார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது முதல்முறை ஆகும்.        இந்நிகழ்வில்தமிழ்நாடு வேளாண் கல்லூரிகள், மத்திய அரசின் இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனம், தமிழக அரசின் வேளாண்மைத் துறை அலுவலர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாண் அதிகாரிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என 5000 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து இருந்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One