எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

Saturday, June 16, 2018

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதனைக் கைவிடுவோர் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., தகவல்குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ள விதிகளில் இந்த விதியும் இணைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 19-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One