எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜிப்மர் கலந்தாய்வு 26ஆம் தேதி தொடக்கம்!

Saturday, June 9, 2018


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், வரும் 26ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரியில் உள்ள 150 இடங்களுக்கும், காரைக்கால் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 54 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதினார்கள். மேலும் புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், அகில்தம்பி 99.9986570 சதவீத மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடத்தையும், பிரிராக்திரிபாதி 99.9975598 சதவீத மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், அகில இந்திய பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் வரும் 26ஆம் தேதி காலை 8 மணிக்குக் கலந்தாய்வு தொடங்குகிறது. மேலும் அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27ஆம் தேதியும், புதுவை பொதுப்பிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர்களுக்கு 28ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One