எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரயில் நிலையங்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 கேஷ் பாக் அளிக்கும் பேடிஎம்..!

Friday, June 8, 2018

பிளாஸ்ட் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்திய ரயில்வே நிர்வாகம் வதோதரா ரயில் நிலையத்தில் பேடிஎம் உடன் இணைந்து 5 ரூபாய் கேஷ்பாக் சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது.


வதோதரா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலை கிரஷ் செய்யும் இயந்திரத்தில் தண்ணீர் பாட்டில்களைக் கிரஷ் செய்யும் போது பேடிஎம் மொபைல் எண்ணைச் சமர்ப்பித்தால் இந்தக் கேஷ் பாக் சலுகை வழங்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் இன்று ரயில்வே அமைச்சகம் மற்றொரு பசுமை முயற்சியாகச் சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் வழங்குப்படும் உணவு பாக்கெட்களினை மக்கும் தன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தச் சேவையினை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மக்கும் பாக்கெட்களின் உணவினை விநியோகம் செய்யக் கூடுதலாக 1 முதல் 5 ரூபாய் செலவாகுவதாகவும் ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One