எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தர்பூசணி விளைவித்து பள்ளி மாணவர்கள் சாதனை

Monday, June 11, 2018


மாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாலைவனம் போன்று இருந்த பள்ளி வளாகம் கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர் முயற்சிகளால் பல செடி கொடிகள் மரங்கள் நடப்பட்டு தற்போது பசுமைப் பள்ளியாக மாறிவருகிறது.


அவரை முருங்கை போன்ற காய்கறி தோட்டம், தூதுவளை கற்பூர வள்ளி போன்ற மூலிகைத் தோட்டம், ரோஜா, வாடாமல்லி போன்ற மலர் தோட்டம், நாவல், வேப்பம், புங்கன், அசோகா, மே பிளவர் நிழல் தரும் மரங்கள் என பல தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தலைமையாசிரியர் சேகர் வழிகாட்டுதலின்படி கடந்த வருடம் மாணவர்களின் முயற்சியால் காய்கறி தோட்டத்தில் உரங்கள் பூச்சி கொல்லிகள் இல்லாமல் இயற்கை முறையில் விளைந்த  25 பூசணிகள் அறுவடை செய்யப்பட்டு மாணவர்களுக்கு சத்துணவில் சமைத்து பரிமாறப்பட்டது. மாணவர்கள் சளி இருமலால் மாணவர்கள் பாதிக்கப்படும்போது தூதுவளை போன்ற மூலிகைகள் அளிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தர்பூசணி விதை நடவு செய்யப்பட்டு மாணவர்களால் பராமரிக்கப்பட்டது. தற்போது அந்த செடியில் ஒரே ஒரு தர்பூசணி காய்த்து வழமாகியது. தலைமையாசிரியர் சேகர் அதை அறுவடை செய்து மாணவர்களுக்கு வழங்கினார். அண்டை மாநிலங்களில் மட்டுமே விளையும் தர்பூசணியை பள்ளி மாணவர்கள் பள்ளியில் அறுவடை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஆசிரியர்கள் ரேவதி, நளின சங்கரி, கேசலட்சுமி, ஷர்மிளா, கோமதி ஆகியோர் மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One