எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை-ஐஐடி இடையே ஒப்பந்தம்

Saturday, June 9, 2018


பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்கம் - ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
சென்னை ஐஐடி- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்கம் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஐஐடி-யின் வல்லுநர் குழு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரிக்கப்படும் முதல் நிலை, துணை நிலை தரவுகளை உரிய முறையில் ஆய்வு செய்து தொழில்நுட்ப உதவிகள் வழங்கும்.
பள்ளிக் கல்வித் துறையில் புதிய உத்தி, கல்வி முறைகளின் செயல் திறனை ஆய்வு செய்தல், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் முறைகளை மேம்படுத்திட தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏற்படும் செலவுத் தொகையான ரூ. 42 லட்சத்தை அனைவருக்கும் கல்வி திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One