எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: முதல்வர் அறிவிப்பு

Tuesday, June 5, 2018

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் என அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 2019 ஜனவரி முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இது பற்றி பேசிய அவர் மழைநீர் கால்வாய்களை அடைத்து  வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக்  பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் கூடாது என்று பேரவையில் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One