எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி:

Friday, June 8, 2018

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
''விடுமுறை நாட்களில், பள்ளி மாணவர்களுக்கு, அருகில் உள்ள தொழிற்சாலைகளில், தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - சக்திவேல்: மேல்நிலைப் பள்ளி பாடத் திட்டத்தில், ஜவுளி மேலாண்மையை, புதிய பாடப் பிரிவாக உருவாக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர், செங்கோட்டையன்: ஏற்கனவே பாடமாக உள்ளது.
சக்திவேல்: பள்ளி மாணவர்களுக்கு, கலை, அறிவியல் பாடங்கள் உள்ளது போல், ஜவுளி மேலாண்மை குறித்த பாடப் பிரிவை துவக்க வேண்டும். இது, மாணவர்கள் தொழில் துவங்க, உதவியாக இருக்கும்.
அமைச்சர், செங்கோட்டையன்: மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தில், தொழிற்கல்விப் பிரிவில், துணிகளும் ஆடை வடிவமைப்பும், ஆடை தொழில்நுட்பம் என்ற பாடங்களில், ஜவுளி மேலாண்மை குறித்து கற்பிக்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு, விடுமுறை நாட்களில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில், தொழில் பயிற்சி அளிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One