எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சா் பாண்டியராஜன்

Tuesday, June 26, 2018

புதிய பாடத்திட்டத்தில் கி.மு - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்) என மாற்றப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் 113-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகா் போக் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதிய பாடத்திட்டத்தில் கி.மு. - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு.- பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு முன் - பொது ஆண்டுக்கு பின்) என மாற்றப்பட்டது குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, ‘ பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றறம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு
மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக்கில் மாற்றப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துவின் பெயா் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை; அரசியல் நோக்கமும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்ற அறிஞா்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவா்கள். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்கு இதுவரை எந்த எந்தவித எதிர்ப்போ அல்லது புகார்களோ வரவில்லை. அப்படி ஏதேனும் விமா்சனங்கள் வரும் பட்சத்தில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் முடிவெடுப்பார் என்றார் அமைச்சா் பாண்டியராஜன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One