எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வித்துறையில் கோலோச்சும் பணியிடங்களை கைப்பற்ற போட்டி : சிபாரிசு மழையால் திணறல்

Wednesday, June 13, 2018

கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர்
(பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சி.இ.ஓ., பி.ஏ.,, உதவி திட்ட அலுவலர் (எஸ்.எஸ்.ஏ., - ஏ.பி.ஓ.,), திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ., - ஏ.டி.பி.சி.,), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) ஆகியோர் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்று, பள்ளிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

.இதையடுத்து அவர்கள், நேற்று முதல் கலந்தாய்வில் பங்கேற்று தலைமையாசிரியராக பள்ளிக்கு மீண்டும் மாறுதல் பெறுகின்றனர். காலியாகும் இடங்களுக்கு நியமனம் செய்ய வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியாகவில்லை.



 அதிகாரிகள் போல் கோலோச்சும் இப்பணியிடங்களை கைப்பற்ற சி.இ.ஓ., மற்றும் அரசியல்வாதிகள் சிபாரிசுகளை தலைமையாசிரியர் பெற்று வருகின்றனர். இதில் பேரம் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் போல் பி.ஏ.,க்கள் உள்ளிட்டோர் செயல்பட்டு கோலோச்சினர். முறைகேடுகள் நடந்தன. இதனால்தான் அவர்களை மாற்ற கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் நடவடிக்கை எடுத்தார்.

 தகுதி, திறமையுள்ளவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் இப்பதவிகளில் நியமிக்க வேண்டும். சிபாரிசு அடிப்படையில் நியமித்தால் மீண்டும் முறைகேடு நடக்கும், என்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One