எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் கல்வி மற்றும் கலை இலக்கியத் திருவிழா

Tuesday, March 27, 2018


கிருஷ்னகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம்
கஞ்சனூர் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் கல்வி மற்றும் கலை இலக்கியத் திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது. கூ.உ.தொ.க.அலுவலர்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில்  முதன்மைக் கல்வி அலுவலர் அம்மா  அவர்களும்.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யா அவர்களும் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அவர்களும்.BRC மேற்பார்வையாளர். ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள். கல்வி மற்றும் சமூக ஆர்வளர்கள். ஆசிரியப் பெருமக்கள் பொதுமக்கள் என பெரும் திரலாக பங்கேற்ற  விழாவில்....

புதியதாக சேர்ந்த 20 மாணவர்களுக்கு வண்ண சீருடை.

பொது மக்கள் சார்பாக பள்ளிக்கு பிரின்டர்.  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் வாய்ப்பு ஏற்படும்போது அரசுக்கு செலுத்த தயார் நிலையில் வைக்க வித்யா மந்திர் கல்வி நிறுவனர் அய்யா அவர்களால் ரூபாய் ஒரு லட்சம்  வழங்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம்,தொடக்கக் கல்வி துறையின் மூலம் 10 ஆண்டுகளில் பள்ளி அடைந்துள்ள வளர்ச்சி மாணவர்களின் செயல்பாடுகள் அடங்கிய   CD மற்றும் கல்வி மலர் வெளியிடப்பட்டது.

100 புரவலர் பெயர் பட்டியல் பலகையும் உலகை மாற்றிய அறிவியல் அறிஞர்கள் படங்களையும் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்களின் கராத்தே சிலம்பம் நடனம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்கள்... என கஞ்சனூர் பள்ளியில் கல்வி மற்றும் கலை இலக்கிய திருவிழா இனிதே நடைபெற்றது.

 த.ஆ. சி.வீரமணி 9443057376

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One