எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில் உருவாக்கப்பெற்ற தொடுதிரையுடன் கூடிய SMART CLASS ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை

Saturday, March 31, 2018










ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்தலையூர், கோபி ஒன்றியம், ஈரோடு மாவட்டம்.
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருந்தலையூரில் 23.3.2018 அன்று அறுபெரும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
1. விளையாட்டுவிழா
2. பாரம்பரிய உணவுத் திருவிழா.
3. முன்னாள் மாணவர் பேரவை துவக்கவிழா.4. பள்ளி ஆண்டுவிழா. 5.புரவலர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுவிழா.
6. வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டுவிழா.
   ஆண்டுவிழா சிறப்பாக நடக்க அனைத்து உதவிகளையும்  செய்தவர்கள்....
1. பொன்னாச்சியம்மன் மகளிர் சுய உதவிக்குழு.
2. ஆதிசக்தி மகளிர் சுய உதவிக்குழு.
 3. குபேரன் மகளிர் சுய உதவிக் குழு.
    அடுத்த நாள் (24.3.2018) ஏழாவது விழாவாக *SMART CLASS திறப்புவிழா* நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்(ரூ80,000) பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில்  உருவாக்கப்பெற்ற *தொடுதிரையுடன் கூடிய SMART CLASS* ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப.  அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. EMR என்கிற கே.ஆர்.இராஜகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
      SMART CLASS- ல் தற்போது 10 கணினிகளும் , 3 மடிக்கணினியும், ஒரு தொடுதிரையுடன் கூடிய ஸ்மாட் போர்டும் உள்ளது.

PRESS RELEASE-இன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்



தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்-அமைச்சர் செங்கோட்டையன்


ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள்


ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.


10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே அவுட் ஆனதால் அந்த இரு மாநிலங்களில் மட்டுமே மறுதேர்வு நடைபெறும். இதுபற்றி இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப் படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விகார் பகுதியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலும் வினாத்தாள் வெளியானதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இல்லம் நோக்கியும் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.


சி.பி.எஸ்.இ. வினாத்தாள் அவுட் ஆனது பற்றி டெல்லி போலீசார்  வழக்குப்பதிவு செய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜார்கண்டில் இது தொடர்பாக 4 மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப் பட்டனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நகரில் வாட்ஸ் அப்பில் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டதாக இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் 2 பயிற்சி பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதற்கிடையே அவுட் ஆன 12-ம் வகுப்பு பொருளாதாரம் வினாத்தாளையும் 10-ம் வகுப்பு கணிதம் வினாத்தாளையும் வாட்ஸ் அப்பில் 6000 பேர் வரை பார்த்து இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 10 வாட்ஸ் அப் குரூப்கள் மூலம் இந்த கேள்வித்தாள் வீடியோக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.


இந்த வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்து பணம் கொடுப்பவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பி வைத்துள்ளனர். தொடக்கத்தில் ரூ.35,000-க்கு விலைபோன வினாத்தாள்கள் பரிட்சை நடைபெறுவதற்கு முதல் நாள் ரூ.500க்கு கூட விற்கப்பட்டுள்ளது.   சி.பி.எஸ்.இ. மண்டல இயக்குனர் கூறும்போது வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக 6 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த புகார்கள் மீது சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு சிறகுகள் சார்பாக நாளை குரங்கனி தீ விபத்தில் உயிர் நீர்த்த ஆன்மாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் அஞ்சலி கூட்டம்


இரங்கல்_கூட்டம் ஈரோட்டில் நடைபெறும்
1. சதீஸ்குமார்

2. ஜெயா வெங்கட்

இருவருக்கும் நடைபெறும் இரங்கல் கூட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன்....

குரங்கனி தீ விபத்தில் உயிர் நீர்த்த ஆன்மாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நிரல்.
இடம் : A .M மண்டபம், பூந்துறை சாலை . ஈரோடு

காலை 7 - 8 : மரம் நடவு
இடம்: சூரம்பட்டி அணைக்கட்டு
ஈரோடு

காலை 9 : வரவேற்புரை

9.10 : மௌன அஞ்சலி

9.25 : நினைவு கூறல்

10.30 : மெழுகுவர்த்தி அஞ்சலி

10.55 : நன்றியுரை
தமிழக இயற்கை ஆர்வலர்கள்

கூடல் விழா பகுதி II நிகழ்ச்சி நிரல்.

11.05 : தமிழ் தாய் வாழ்த்து

11.15 : வரவேற்புரை

11.20 : அங்கீகாரம்

11.45 : தமிழக இயற்கை ஆர்வலர்கள் உயர் மட்ட குழு தீர்மானம்

12.30 : உணவு இடைவேளை

1.30 : மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு தீர்மானம்

2.30 : சிறப்புரைகள்

4.00 : இயற்கை ஆர்வலர்கள் கலந்தாய்வு

4.30 : முக்கிய தீர்மானம்

4.45 : அறிவிப்பு

4.55 : நன்றியுரை

5.00 : தேசியகீதம் .

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே..


முட்டாள்கள் தினம்...!

ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை...

முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை காரணங்களும் பல கூறப்படுகின்றன. உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனால் நமக்கேதும் நிகந்துவிடபோவது இல்லை.

ஆனாலும் சரியான காரணம் தெரியாமலேயே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் இந்த முட்டாள்கள் தினம் நம்ம ஊர் மக்களையும் தொத்திக்கொண்டு விட்டதுதான் காலத்தின் கோலம்.

பிரபல தொலைக்காட்சிகள் கூட ஒருவரை ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் காண்பித்து, 'கல்லா' கட்டிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல... முன்பு ஒரு தமிழ் வார இதழ், குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் திருமணம் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

அதாவது ஒருவரை ஒரு சில நிமிட சிரிப்பிற்காக இகழ்வதும் பரிகசிப்பதும் விளையாட்டிலும் துன்பம் தரக்கூடியது, ஆனால் பண்புள்ளவர்கள், பகைவரே ஆனாலும் விளையாட்டிற்கு கூட இகழ மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

எங்கோ, எதற்கோ துவங்கிய இந்த முட்டாள்கள் தினத்திற்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதை கொண்டாடுவதால் என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது?

சட்டையில் மை அடிப்பது, கலர் காகிதம் ஒட்டுவது, நக்கலடிப்பது, கிண்டலடிப்பது, திடீரென அதிர்ச்சி அளிப்பது... இப்படி பல செயல்களில் ஈடுபட்டு மகிழ்வதற்கு ஒருநாளா?

விளையாட்டுக்காக செய்யும் அதிர்ச்சிகளை எல்லோரும் ஒரே மாதிரியாக எடுத்து கொள்வார்களா? பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என யோசித்ததுண்டா?

விளையாட்டு வினையான சம்பவங்களை அனுபவித்ததுண்டா?

மகிழ்ச்சி என்றாலும் கூட அதில் ஆபத்து நிறைந்திருக்கக்கூடும் என புரியாதா?

முட்டாள் ஆகாமல் நாம் இந்த ஒருநாள் மட்டும் இருந்தால் போதுமா?

மற்ற எல்லா நாளும் எல்லோருமே அறிவாளிகளாக இருந்துவிட முடியுமா?

எல்லா அறிவாளிகளிடமும் ஒரு சிறு முட்டாள்தனம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் அவன் அறிவாளியா, முட்டாளா என தெரியவருகிறது.

நேர்மையாக, நாணயமாக, உண்மை பேசி வாழ வேண்டிய மனிதர்கள் கூட இந்நாளில் மற்றவர்களை நையாண்டி செய்து பொய் சொல்லி விளையாடுவது கவலைக்குரியதே.

அறிவும், அபரிமிதமான அறிவியில் வளர்ச்சியும் கண்டுள்ள இந்த காலகட்டத்தில் மனிதர்களில் சிலர் இப்படி பிற்போக்கு சிந்தனைக்கு பலியாகியுள்ளது பரிதாபத்திற்குரியதே.

இத்தகைய பிற்போக்குதனத்திற்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி, மீம்ஸ்களை உருவாக்கி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற நவீனத்துவத்தை துணைக்கு அழைத்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மெத்த படித்த மேதாவிகளும், வருங்கால இந்தியா என நம்பிக்கொண்டிருக்கும் சில இளைஞர்களும்கூட இந்த முட்டாள்கள் தினத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.

ஆனால் அதே இளைஞர்களில் சிலர், கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு தகவல் ஒன்றினை வாட்ஸ்ஆப் மூலம் பரிமாற்றம் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.

ஏப்ரல் ஃபூல் கொண்டாடுவதைவிட அன்றைய தினம் ஏப்ரல் கூல் என்ற பெயரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று நட்டுவைக்கலாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்த சூழ்நிலைக்கு தேவையான ஒன்றாகவும் உள்ளது.

உண்மைதான். அன்றைய தினம் மரக்கன்று நடுவதால், சுற்றுசூழல் இனிமை பெறும், மாசு குறையும், மரங்களின் எண்ணிகை பெரும், குளுமைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். வரப்போகிற கோடையை எப்படி சமாளிக்கலாம் என்று ஏற்கனவே விழிபிதுங்கி இருக்கும் நேரத்தில் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பரிமாறிவரும் அந்த இளைஞர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

ஒரு தினத்தை நாம் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் ஏன் கொண்டாடுகிறோம், எதற்கு கொண்டாடுகிறோம் என்று தெரிந்து உணர்ந்து கொண்டாட வேண்டும். அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், அடுத்தவர்களுக்கு உபயோகம் இருக்க வேண்டும். அதற்கு மேற்கூறிய இளைஞர்கள் நல்ல துவக்கத்தை எடுத்து வைத்துள்ளனர்.

எனவே, ஐரோப்பிய நாட்டின் கண்டுபிடிப்பான இந்த ஏப்ரல் பூல் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்ற அவசியமும் இல்லை, கட்டாயமும் இல்லை, அதனால் பத்து பைசாகூட பிரயோஜனம் இல்லை. ஒருவரை மகிழ்விக்கவும், மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆயிரம் வழி உண்டு. அதற்கு இத்தகைய மலிவான செயல்கள் தேவையில்லை.

மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் இத்தகைய பழமைவாதத்தை தூக்கியெறிந்து, நம் நாட்டின் சூழ்நிலைகளை உணர்ந்து... தேவைகளை அறிந்து... செயல்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

மிககுறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்?


ம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு!

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!!!


கற்பித்தலை எளிமையாக்க, பொம்மலாட்டத்தை கற்றுக்கொள்ள மே 11, 12, 13 ஆகிய நாட்களில் ஆசிரியர்களுக்கான "கோடைக்கால பொம்மலாட்ட பயிற்சி முகாம்"


மொட்டுகள் உருவாக்கிய மூலிகைத் தோட்டம் அர்த்தமுள்ள அரசுப் பள்ளி


கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா


விபூதி மலையில் சூரிய உதயம் காணுங்கள்

ஊட்டி குளிரை அங்கலாவில் அனுபவியுங்கள்


பயண அனுபவம்:

காரைக்குடி - மேட்டுப்பாளையம் பயணம்

காரைக்குடியில் இருந்து மாலை 7 மணி அளவில் கிளம்பி திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம்,தாராபுரம்,பல்லடம்,அன்னுர் வழியாக மேட்டுப்பாளையம் அடைந்தோம்.அங்கு இரவு தங்கி விட்டு காலை அங்கிருந்து கிளம்பி குன்னுர் வரை சென்றோம்.

முதல் நாள் பயணம் :

ரயில் பயணம் - குன்னுர் டூ ஊட்டி

குன்னுரில் காலை 10 மணிக்கு அடைந்தோம்.அங்கு காலை 10.40 மணிக்கு கிளம்பும் ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ஊட்டி வரை ட்ரெயினில் சென்றோம்.அருமையான பயணம்.டிக்கெட் வெறும் 10 ரூபாய் மட்டுமே.குன்னுரில் கிளம்பி சரியாக ஒரு மணி நேரம் பயணம்.வழியில் வெலிங்டன்,அரவங்காடு,கேத்தி ,லவ்டேல் வழியாக ஊட்டியை சென்று அடைந்தோம்.அங்கு எங்கள் கார் ரெடியாக இருந்தது.ஊட்டி வரை ரயில் பயணத்தில் சில குகைகளின் வழியாக சென்றோம்.அருமையான பயணம்.


ஊட்டி டூ மசினக்குடி பயணம் ( ஆபத்தான பயணம் )


ஊட்டியில் மதியம் கிளம்பி தலகுந்தா என்கிற இடத்தில் இருந்து 37 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மசினக்குடி செல்ல வேண்டும்.தலகுந்தாவில் காவலர் ஒருவரிடம் வழி கேட்டபோது ,எங்களிடம் காவலர் வாகனத்தை  இரண்டாம் கியரில் மட்டுமே செலுத்துங்கள்  என்று அறிவுறுத்தி அனுப்பினார்.சுமார் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பின்பு மசினக்குடியை அடைந்தோம்.செல்லும் வழியில் சிறிது தூரத்துக்கு இடைவெளியில் வேகத்தடை அமைத்து உள்ளனர்.காரணம் கேட்டபோது வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் அவ்வாறு அமைக்கப்பட்டுளதாக தெரிவித்தனர்.வழியில் மான்களை பார்த்தோம்.அடர்ந்த காட்டின் வழியாகத்தான் பயணம்.மசினகுடியில்  ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டேலில் சாப்பிட்டு விட்டு அங்கு ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் ரூம் போட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தோம்.

கர்நாடகா மாநிலம் அங்கலா கோபாலசாமி கோவிலுக்கு பயணம்

மசினகுடியில் மதியம் சாப்பிட்டு விட்டு எங்கள் ( காரைக்குடி சொக்கலிங்கம் ) பயணத்தை மீண்டும் துவக்கினோம்.முதுமலை சரணாலயம் வழியாக மைசூர் செல்லும் பாதையில் பந்திப்பூர் சரணாலயம் வழியாக கர்நாடகா மாநிலம் அங்கலாவை அடைந்தோம்.மாலை சுமார் 3.20 மணிக்கு சென்று அடைந்தோம்.அங்கலாவில் கோபாலசாமி கோவில் செல்வதற்கு மலை அடிவாரத்தில் தனியாக கர்நாடக அரசு பேருந்து தயராக உள்ளது.மாலை 4 மணிக்கு மலைக்கு செல்வதற்கு கடைசி பேருந்து.அந்த பேருந்தில் ஏறி நாங்கள் மலை உச்சியில் இருக்கும் கோவிலுக்கு சென்றோம்.செல்லும் வழியில் அடர்ந்து உள்ளது காடு.நாம் செல்லும் வாகனத்தை மலை அடிவாரத்தில் நிறுத்தி விடவேண்டும்.

வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் சொட்டும் பனிநீர்  கோபாலசாமி கோவில் - ஊட்டிக்கு நிகரான குளிர் உள்ள கர்நாடகா மலை கோவில்
                   அங்கலா அடிவாரத்தில் இருந்து சுமார் 15 நிமிட பேருந்து பயணத்துக்கு பின்பு கோபாலசாமி கோவில் மலைக்கு சென்றோம்.அங்கு கிருஷ்ணர் அழகாக இருந்தார்.அவரது சிலை இருக்கும் இடத்தில் மேலே வருடம் முழுவதும் பனிநீர் சொட்டி கொண்டே இருக்குமாம்.கோபாலசாமி கடவுளை வேண்டி கொண்டால் பல்வேறு நன்மைகள் நடக்கும் என்று சொன்னார்கள்.அங்கு அனைத்து நாட்களும் சக்கரை சாதம் ,புளியோதரை,வெள்ளை சாதம் சாம்பாருடன்,காய் கறிகளுடன் தட்டில் வைத்து வழங்கப்படுகிறது.
                                      அந்த மலை ஊட்டியில் எவ்வாறு குளிர் இருக்குமோ அது போன்று குளிர் இருக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் நிற்கும்போதே குளிர் இருந்தது.நம்மை மாலை சுமார் 4.20 மணி போல் கோவிலில் இறக்கி விட்டு மீண்டும் சுமார் 5.20 மணி போல் பேருந்தில் ஏற்றி அடிவாரத்தில் கொண்டு வந்து விடுகின்றனர்.காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை பேருந்து மலைக்கு செல்கிறது.நாம் காலையில் சென்று விட்டு மாலையில் வரலாம்.அல்லது விருப்பட்ட நேரத்தில் வரலாம்.அதுவும் மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்பி விட வேண்டும்.நாங்கள் சென்ற பேருந்தில் நாங்கள் மட்டுமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கோபாலசாமி கோவிலை பற்றி  கன்னடர்கள் அழகாக  பாட்டு பாடியபடியே பேருந்தில் வருகின்றனர்.

மைசூர் தர்ப்பூசணி பழங்கள் :
                        அங்கலாவில் இருந்து மீண்டும் எங்களது வாகனத்தில் மசினக்குடி நோக்கி வரும்போது கர்நாடக மாநிலத்தின் காடுகளின் அழகை ரசித்தபடி வந்தோம்.அந்த வழியிலும் தொடர்ந்து ஆங்காங்கே வேகதடைகள் உள்ளன .காட்டு விலங்குகள் உள்ளதாக சொன்னார்கள்.
வழியில் மைசூர் தர் பூசணிக்காய்களை அதிக அளவில் பார்த்தோம்.நம்மூரில் இளநீர் கடைகளை காண்பது போல் அடுத்து ,அடுத்து தர்ப்பூசணி பழங்கள் கொட்டி கிடக்கின்றன .அவற்றை பெரிய சாக்குகளில் கொட்டி  கட்டி வைத்து உள்ளனர்.ஒரு பழமாக வாங்கினால் 10 ரூபாய் என்று சொல்லி விற்றார்கள் .மூட்டையாக வாங்கினால் விலை குறைவு.

அழகான வரவேற்புடன் எங்களை வரவேற்ற பந்திப்பூர் சரணாலயம்:
           
                             நாங்கள் தர்ப்பூசணிகளை வாங்கி ருசித்து கொண்டே வரும்போது மாலை 5.45 மணி போல் பந்திப்பூர் சரணாலயம் வந்தோம்.அங்கு வருவற்கு முன்பு எங்களை அழகாக புலி சிலையுடன் கர்நாடக மாநில வனத்துறையின் வளைவு வரவேற்றது.பந்திப்பூர் சரணாலயத்திலும் வனவிலங்குகளை காண சஃபாரி செல்லலாம்.செல்வதற்கான நேரங்கள் மற்றும் கட்டணம்  தொடர்பான தகவல்கள் ;

பயணத்திற்கான நேர விவரம் :

காலை : மணி 6.30 முதல் 8.30 மணி வரை
மாலை : 3.30 மணி முதல் 5.30 மணி வரை
                                டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 3 மணி முதலும் வழங்கப்படும்.

கட்டண விவரம் :
                       சஃபாரி வேனில் செல்வதற்கு   12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 350 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
                   தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 3000 ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.

யாரை தொடர்பு கொள்வது ?
                        நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் வழியாக புக் செய்யலாம் . முகவரி : www.bandipurtigerreserve.in.தொடர்பு எண் : 08229-236051(வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .

வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?

                                          அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .

நம்மூரில் ஆடுகள் சுற்றி திரிவது போல் சுற்றி திரியும் மான்கள் கூட்டம் :

முதுமலை நோக்கி பயணம் :பந்திப்பூர் சரணாலயம் பார்த்து விட்டு அங்கிருந்து முதுமலை நோக்கி பயணம் செய்தபோது எங்கெங்கு காணினும் மான்களின் கூட்டம் அருமையாக உள்ளது.நம்மூரில் ஆங்காங்கே ஆடுகள் கூட்டம் உள்ளதுபோல் மான்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.பார்ப்பதற்கு கண்களுக்கு அழகாக ,அருமையாக உள்ளது.

மந்திகள் கூட்டம் :
                               மந்தி குரங்குகளும் அதிகமாக உள்ளன.அவற்றை பார்ப்பதற்கே அழகாக உள்ளன.நம்மூர் குரங்குகள் போல் மனிதர்களிடம் உள்ள பொருள்களை வாங்க முயற்சிக்காமல் மந்திகள் அவை ,அவை அவற்றின் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தன.நம்மை தொந்தரவு செய்யவில்லை.

முதுமலை சரணாலயம் :
                                           மாலை 6 மணி அளவில் முதுமலை சரணாலயத்தை அடைந்து அடுத்த நாள் எவ்வாறு எங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விசாரித்து கொண்டோம் .காலை 6 மணிக்கு வந்துவிட்டால் முதல் ட்ரிப்பில் வனவிலங்குகளை பார்க்க வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்கள்.பிறகு அங்கிருந்து பொறுமையாக கிளம்பி மசினகுடி வந்து சேர்ந்தோம்.

இரண்டாம் நாள் பயணம் :

வனவிலங்குகளை காண வேன்  டிக்கெட் வாங்குதல் :

                    இரண்டாம் நாள் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருத்து குளித்து ரெடியாகி சரியாக 6 மணிக்கெல்லாம் முதுமலை சென்று அடைந்தோம்.அங்கு 6.30 மணியளவில் தான் டிக்கெட் கொடுக்கும் இடம் திறக்கப்பட்டது.வனத்துறை வேன் மூலம் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 340 டிக்கெட் கொடுக்கப்படுகிறது.முதலில் செல்பவர்களுக்கு சீட் எண் 1,2,3,4 கொடுக்கப்படுகிறது.இந்த எண்களில் சீட் வாங்கினால் மிக அருமையாக வனவிலங்குகளை பார்ப்பதற்கும்,படம் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்திற்கான நேர விவரம் :

காலை : மணி 6.00 முதல் 10 மணி வரை
மாலை : 2.00 மணி முதல் 6.00 மணி வரை
                                டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 2 மணி முதலும் வழங்கப்படும்.

கட்டண விவரம் :
                       சஃபாரி வேனில் செல்வதற்கு   12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 340 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
                   தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 4200ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.ஒரு ஜீப் மற்றும் ஜிப்ஸி மட்டுமே உள்ளதால் காலையில் வெல்லனா சென்றால் மட்டுமே முதலில் அவற்றை புக் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரை தொடர்பு கொள்வது ?
                        நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் www .mudumalaitigerreserve.com  வழியாக புக் செய்யலாம் . முகவரி : தொடர்பு எண் : தெப்பக்காடு : முதுமலை : 0423-2526235 .ஊட்டி : 0423- 2445971 (வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .

வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?

                                          அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .

யானை சவாரி :
                                  காலை 7 மணி முதல் 8 மணி வரை.
                                  மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
யானைகளின் புத்துணர்வு முகாம் நடைபெறும் நாள்களில் இந்த யானை சவாரி கிடையாது.

வனவிலங்குகள் பார்ப்பதற்கு சென்ற எங்களின் அனுபவம் :

கரடியையும்,காட்டு யானையும் பார்த்த அனுபவம்  :( காரைக்குடி சொக்கலிங்கம் )

                                                      முதலில் மான்களின் கூட்டம் அதிகமாக பார்த்தோம்.முதுமலையில் கிளம்பி கூடலூர் செல்லும் மெயின் ரோட்டில் சென்று பிறகு காட்டு பகுதிக்குள் சென்றோம்.காடு என்றால் அடர்த்தியான காடு.பல கிலோமீட்டர் சென்ற பிறகு மான்களையும்,கரடியையும் பார்த்தோம்.மான்களை வெகு அருகில் பார்த்தோம்.அதிகமான கூட்டம் இருந்தது.எங்களை பார்த்து அவை ஓடவில்லை.எங்கள் உடன் வந்த வாகன காப்பாளர்கள் எங்களை கீழே இறங்க விடவில்லை.வண்டியில் இந்தப் வண்ணமே போட்டோ எடுத்தோம்.பிறகு மயில்களையும் அதிக அளவில் பார்த்தோம்.அவையும் நன்றாக அருகில் வந்தன.

காட்டு யானை :
                           வழியில் காட்டு யானை ஒன்றை மட்டும் பார்த்தோம்.அது ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.அதனை எங்களுக்கு வேண்டிய அளவில் போட்டோ எடுத்து கொண்டோம்.பிறகு அங்கிருந்து எங்கள் வண்டி மெயின் ரோட்டை நோக்கி அதாவது மைசூர் ரோட்டை நோக்கி சென்றது.காலை 6.55 மணி முதல் சுமார் 8.20 மணி வரை காட்டை வண்டியில் சுற்றி பார்த்தோம்.

யானை உணவு உண்ணும் இடம் :
                               காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் முதுமலை வரவேற்பு பகுதிக்கு எதிர்த்தார் போல் உள்ள பாலத்தை கடந்து சென்றால் யானைகள்  உணவு உண்ணும் இடம் உள்ளது.அங்கு யானைகளுக்கு பல்வேறு வகையில் கொள்ளு உட்பட அனைத்தையும் கலந்து உருண்டையாக உருட்டி கொடுக்கின்றார்கள்.யானைகளுக்கு உணவு கொடுக்கும் அழகே தனிதான்.


யானைகள் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ? பொறுப்பாளர் மாறன் கூறுவதை கேளுங்கள் :

மாத்திரையுடன் உணவு : உண்ண மறுக்கும் யானைகள் :
                                         யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் யானை ட்ரிப் இப்போது இல்லை.யானைகளுக்கு சத்து கொடுக்கும் விதத்தில் மாத்திரை சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஒரு யானைக்கு சுமார் 8 கிலோ உணவு 7 அல்லது 8  உருண்டைகளாக வழங்கப்படுகிறது.
                              முதல் உருண்டை கொடுக்கும்போது யானைகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறது.பிறகு அடுத்த உருண்டை வாங்க மறுக்கிறது .காரணம் அதனில் மாத்திரை வைத்து கொடுக்கும்போது அந்த ருசியை தெரிந்து கொண்டு அவை சாப்பிட மறுக்கிறது .பிறகு சிறு குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று பாகன்கள் யானைகளை மிரட்டி,உருட்டி சாப்பிட வைக்கிறார்கள்.
                                          சுமார் 68 வயது,67 வயது உடைய யானைகளை நாங்கள் பார்த்தோம்.யானைகளுக்கு உணவு கொடுப்பது,பார்ப்பது அனைத்துமே அழகு.அருமை.யானைகள் புத்துணர்வு முகாமில் உள்ளதால் சிறிது தூரம் நடக்க செய்து மீண்டும் அழைத்து வந்தார்கள்.
                                    யானை உணவு வழங்கும் இடத்தில் மந்தி கூட்டம் அதிகம்.அவை பாட்டுக்கும் ஜாலியாக விளையாண்டு கொண்டு நமது அருகில் வந்து செல்கின்றன.

மீண்டும் மசினகுடி செல்லுதல் :
                                                காலை 9.30 மணி அளவில் மீண்டும் முதுமலை டூ  மசினகுடி பயணம்.மசினகுடியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சிங்காரா மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.

நடு ரோட்டில் மரம் சாய்ந்து விழுதல் :
                                  மலை வாழ்க்கையை நினைத்தால் பயமாகத்தான் உள்ளது.நாங்கள் மசினகுடியில் கிளம்பி சிங்காரா செல்லும் பாதையில் பயணித்து கொண்டு இருக்கும்போது நடு  ரோட்டில் மரம் விழுந்து பாதையை மறைத்து கொண்டது.அந்த பக்கம் இருந்தும்,இந்த பக்கம் இருந்தும் வாகனங்கள் செல்ல இயலவில்லை.சிங்காராவில் இருந்து வந்த மின் உற்பத்தி பிரிவின் அலுவலர் ஒருவர் பெங்களுரு செல்ல வேண்டும் என்று பறந்து கொண்டு,தவித்து கொண்டு இருந்தார்.ஆனால் மரமோ உடனடியாக எடுக்கும் நிலையில் இல்லை.

 மோயார் பயணம் :
                          நடு ரோட்டில் மரம் விழுந்ததால் மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து மோயார் மின் உற்பத்தி நிலையம் நோக்கி சென்றோம்.மோயர் மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் எண்ணிலடங்கா மான்களின் கூட்டம் கண்டோம்.அங்கு உள்ள நீர்ப் பிடிப்பு  அணையை பார்த்தோம்.தண்ணீரை பார்த்து எங்களுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி.பிறகு அங்கிருந்து சிறப்பு அனுமதி பெற்று வின்ச் வழியாக கீழ் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை சென்று பார்த்தோம்.மிக அருமையான ,வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.வின்ச் முழுவதும் செங்குத்தாக செல்லும்.அங்கு தண்ணீர் உற்பத்தி ஆகி பைப் வழியாக மிக வேகமாக வந்து விழும் வேகத்தில் அங்கு உள்ள மெஷின் சுற்றி அதன் வழியாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தமிழ்நாடு மின்துறையின் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதியில் விட்ட சிங்காரா மின் உற்பத்தி நிலையம் பயணம் :
                      மோயார் பகுதியில் இருந்து மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து சிங்காரா நோக்கி பயணித்தோம்.நாங்கள் காலையில் பார்த்த மரம் சுமார் மதியம் 2.15 மணியளவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டது.அதன் பிறகு நாங்கள் சிங்காரா நோக்கி சென்றோம்.காலையில் அவசரமாக பெங்களூரு செல்ல வேண்டும் என்ற இ .பி.அலுவலரும் மதியம் 2.15 மணிக்குத்தான் வழி கிடைத்து சென்று கொண்டு இருந்தார்.இதுதான் மலைப்பகுதி வாழ்க்கை.

குகைக்குள் பயணம் :
                                          சிங்காராவில் புஷப் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு ( காரைக்குடி சொக்கலிங்கம் )முன் அனுமதி பெற்று சென்றோம்.சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையை குடைந்து அங்கு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள கிளன்மார்கன் எனும் இடத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் ட்டனால் வழியாக சிங்காரா வருகிறது.அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சிங்காராவில் உள்ள பைக்காரா மின் உற்பத்தி நிலையம் :
                                    புஸப் பகுதியில் இருந்து மீண்டும் நாங்கள் 1932ம் ஆண்டு கட்டப்பட்ட பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.இங்குஇருந்து முதன் முதலாக மின் உற்பத்தி செய்யப்பட்ட மதுரைக்கு அனுப்பப்பட்ட நினைவாகத்தான் மதுரையில் பைக்காரா என்ற இடம் உள்ளதாக சொன்னார்கள்.நாங்கள் அங்கு உள்ள இடங்களை அனைத்தும் பார்த்தோம்.புதியதாக அமைக்கப்பட்ட மின் உற்பத்திக்கு தேவையான மெஷின்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் ஒர்க்ஷாப்பை பார்த்தோம்.இந்த பட்டறை கடந்த 1917ம் ஆண்டு முதல் செயல் பட்டதாக அங்கு இருந்த அலுவலர் எங்களிடம் தெரிவித்தார்.பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் அழகான காபி தோட்டம் உள்ளது.அதனை பார்த்து ரசித்து விட்டு அங்கு இருந்து நாங்கள் மீண்டும் மசினகுடிக்கு மாலை வந்து சேர்ந்தோம்.

பொக்காபுரம் அம்மன் கோவில் :
                                     மசினகுடியில் இருந்து மாலை 4.30 மணி அளவில் கிளம்பி நாங்கள் ஊட்டி செல்லும் வழியில் உள்ள பொக்காபுரம் என்னும் இடத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றோம்.இந்த பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற அம்மன் என்று சொன்னார்கள்.அங்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அங்கு அருகில் உள்ள விபூதி மலைக்கு செல்ல தயரானோம்.

விபூதி மலை : சூரியன் உதயம்,அஸ்தமனம் காணலாம் :
                       பொக்காபுரத்தில் ஊருக்குள் சின்ன வழியாக செல்கிறது.ட்ரெக்கிங் செல்வது போல் செல்ல வேண்டும்.சுமார் 40 நிமிடங்கள் பொறுமையாக மலை ஏறி காடு ,மலைகளை கடந்து விபூதி மலைக்கு செல்ல வேண்டும்.நல்ல உடற்பயிற்சி.ஏறிய உடன் முருகன் கோவில் உள்ளது.முருகன் சின்ன உருவத்தில் அழகாக உள்ளார்.அங்கு இருந்து மாலை சூரியன் கொஞ்சம்,கொஞ்சமாக அஸ்தமனம் ஆவதை காண இயலுகிறது .மீண்டும் அங்குறிந்து சுமார் 20 நிமிடங்கள் கீழே இறங்கி மீண்டும் மசினகுடி அடைந்தோம்.
                                நீங்கள் மலை ஏறுவதற்கு சிரமப்பட்டால் மசினகுடியில் இருந்து ஜீப் வழியாக விபூதி மலையை அடையலாம் .சுமார் 8 பேருக்கு மொத்தமே 500 ரூபாய் பெற்று கொண்டு நம்மை அழைத்து சென்று மீண்டும் அழைத்து வந்து விடுகின்றனர்.அப்படியும் செல்லலாம்.15 நிமிடங்களில் சென்று விடலாம்.அதி காலையில் சூரியன் உதயத்தை நாம் காண மசினகுடியில் சொல்லி விட்டால் நம்மை அழைத்து செல்ல ஜீப் ஓட்டுனர்கள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்கின்றனர்.அருமையான மலை பகுதி.மாலையில் 5.30 மணிக்கு மேல் மிஸ்ட் உருவாகி விடுகிறது.நல்ல குளிர் நிலை.அனுபவிக்க ஏற்ற இடம் .

 மூன்றாம் நாள் பயணம் :

கிளன்மார்கன் அணைக்கு பயணம் :

                              மசினகுடியில் இருந்து கிளம்பி ஊட்டி நோக்கி ( காரைக்குடி சொக்கலிங்கம் )சென்றோம்.ஊட்டியில் மசினகுடியில் இருந்து செல்லும்போது தலகுந்தா என்கிற இடத்தில் பிரிந்து சில கிலோமீட்டர் பயணம் செய்து கிளன்மார்கன் டீ  எஸ்டேட் தாண்டி சென்றோம்.நல்ல அடர்த்தியான காடு.அங்கு சில மையில் தூரத்தில் நம்மை பைக்காரா அணை வரவேற்கிறது.அங்கு இருந்து அந்த அணையை ஒட்டியே சென்றோம் என்றால் கிளன்மார்கன் அணை பகுதி வருகிறது.முக்குருத்தி என்கிற இடத்தில் இருந்து பைக்காரா வரும் தண்ணீர் அடுத்து கிளன்மார்கன் அணைக்கு வருகிறது.இங்கு இருந்துதான் தணல் வழியாக தண்ணீர் சிங்காரா செல்கிறது.பார்க்க வேண்டிய இடம்.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே இங்கு செல்ல இயலும் .

வின்ச் பயணம் :
                                        கிளன்மார்கன் அணையில் எங்களை அங்கு உள்ள அலுவலர் வரவேற்று நல்ல முறையில் வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.வின்ச்சில் நான்காவது வின்ச் பகுதியில் இருந்து மூன்றாவது வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.அருமையான பயணம்.தணல் வழியாக ஏற்படும் ரிப்பேர்களை சரி செய்ய வின்ச் அமைக்கப்பட்டுள்ளது.விஞ்சில் கிளம்பிய சிறிது நேரத்தில் மிக அழுத்தமான ஒரு உடல் அமைப்பு இருந்தது.சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது.சுமார் 800 மீட்டர் பயணம் செய்தோம்.15 நிமிடங்கள் இருக்கும்.மூன்றாவது வின்ச் பகுதிக்கு வந்துவிட்டோம்.அங்கு இருந்து அடுத்த 1600 மீட்டர் பயணம் செய்தால் சிங்காரா அடைந்து விடலாம்.சுமார் 40 நிமிட மலை வழி வின்ச் பயணத்தில் நேராக சிங்காரா செல்லலாம் .வின்ச் இயக்குபவர் அடிக்கடி ஓடும் விஞ்சில் இருந்து சர்வ சாதாரணமாக இறங்கி (அருகில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி ஏறி ) அதனை சரி செய்து கொண்டே எங்களுடன் வந்தார்கள்.மீண்டும் அங்கு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கு இருந்து வின்ச் வழியாக கிளன்மார்கன் அணைக்கட்டுக்கு மலை ஏறினோம்.இப்போது அலுவலர் கொடுத்த தைரியத்தில் நாங்கள் மீண்டும் வின்ச் முன் பகுதியில் வந்து நின்று கொண்டு வந்தோம்.அருமையான பயணம்.நம்மை சுற்றிலும் பச்சை பசேல் என்று வனப்பகுதி.வின்சோ செங்குத்தாக ஏறுகிறது.இயற்கையை ரசித்து கொண்டே நாம் பயணம் செய்யலாம்.மீண்டும் நாங்கள் மலை பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.


கிளன்மார்கன் டேம் செல்லுதல் :

                                          அணைக்கட்டு பகுதி அருமையான இடம்.மிக பெரிய அளவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய இடம்.இங்கு செல்லும்போதும் நம்மை பைக்காரா நதி வழி நடத்தி செல்லுகிறது.ஒரு பக்கம் முழுவதும் காடுகள் அடங்கிய மலைப்பகுதி,இன்னொரு பக்கம் அடியில் தண்ணீர் உள்ள பகுதி.அழகாக இருந்தாலும் கவனமுடன் நாம் செல்ல வேண்டும்.
                                          ஆங்கிலேயர் காலத்தில் அருமையாக யோசனை செய்து இந்த இடத்தை வடிவமைத்து உள்ளார்கள்.இன்று அளவும் அவை நமக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது.( காரைக்குடி சொக்கலிங்கம் )

ஊட்டியில் உள்ள பைக்காரா டேம் நோக்கி பயணம் :
                                 ஊட்டியில் உள்ள பைக்காரா நீர் மின் நிலையம் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் வரும் பைக்காரா டேமை சென்று பார்த்தோம்.இதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.பொன் விழா கண்ட இந்த அணைக்கட்டுக்கு அவசியம் சென்று பார்க்க வேண்டும்.அருமையான இடம்.தண்ணீர் அதிகம் உள்ள இடம்.இங்கு இருந்துதான் பைக்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கும்,சிங்காராவுக்கும் தண்ணீர் செல்கிறது.இதன் மேலே ஆய்வு மாளிகை உள்ளது.அதன் அருகில் வெலிங்டன் நீர் பயிற்சி கல்லூரி உள்ளது.அருமையான இடம்.மத்திய படையினர்க்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படும் பைக்காரா அருவி :
                                பைக்காரா அருவி செல்ல நீங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.அருவியில் குளிக்க முடியாது.இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அருவிக்கு மிக நீண்ட தூரம் முன்பாகவே நமது காரை நிறுத்தி விடுகின்றனர்.அங்கு இருந்து சுமார் 10 நிமிடங்கள் நடந்து சென்றால் வனத்துறையினர் நம்மிடம் தலைக்கு ரூபாய்  10 வாங்கி கொண்டு உள்ளே விடுகின்றனர்.நாம் அருவி மட்டுமே பார்க்க இயலும்.அந்த இடத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் ரசிக்கலாம்.மீண்டும் நாம் வண்டி இருக்கும் இடத்திற்கு நடந்து தான் வரவேண்டும்.
                                     ஒரே ஒரு வசதி இங்கு பேட்டரி கார் உள்ளது .அந்த காரின் மூலம் நடக்க இயலாதவர்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் செல்லலாம் .ஒரு வண்டிக்கு 60 ரூபாய்.ஆள் ஒன்றுக்கு ரூபாய் 10.அப்படியும் செல்லலாம் .

பைக்காரா படகு சவாரி :
                                        அருவியில் இருந்து பைக்காரா படகு சவாரி செல்லலாம்.அங்கு ஒரு அரை மணி நேரம் அருமையான படகு சவாரி செய்யலாம்.ஊட்டியில் படகு சவாரி செய்வதை விட இங்கு படகு சவாரி செய்வதன் நன்மை என்னவெனில் ,இங்கு தண்ணீர் நன்றாக சுத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்பீட் போட்,குழுவாக செல்லும் போட் என அனைத்து வகையான போட்களும் உண்டு.


பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் :
                                          பைக்காரா அருவியில் இருந்து வெளியில் வந்து சிறிது தூரத்தில் கீழே இறங்கினால் பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் வருகிறது.அங்கு பைக்காரா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்குள் வந்து எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்டுகிறது என்பதை தெளிவாக காண இயலும்.இதற்கு நாம் மின் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.

பைக்காரா ஷுட்டிங் ஸ்பாட் :"
                                                     பைக்காரா நீர் மின் நிலையத்தில் இருந்து வெளி வந்து நாம் சில கிலோமீட்டர் தூரம் சென்றால் ஷுட்டிங் ஸ்பாட் என்கிற அருமையான புல் வெளி பகுதி வருகிறது.அங்கு வனத்துறையின் டிக்கெட் வாங்கி கொண்டு நாம் உள்ளே செல்லலாம் .உள்ளே செல்லும்போது நாம் எந்த பேப்பரும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மலையேறும் வழி அழகாக உள்ளது.அதன் இடது புறத்தில் குதிரை சவாரி உள்ளது.வனத்துறை மற்றும் உள்ளூர் சுற்று சூழல் குழுமம் இணைந்து இதனை நடத்துகின்றனர்.கொஞ்சம் கட்டணம் அதிகமாக உள்ளது.ஒரு ரவுண்டு ,அரை ரவுண்ட்,பழங்குடியினர் வசிக்கும் இடம் வரை சென்று வரக்கூடிய சுற்று என அனைத்துமே கட்டணத்துடன் உள்ளது.சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் மற்றும் சவாரி.
                                குதிரை சவாரியை முடித்து கொண்டு மேலே ஏறினால் நமக்கு புல் வெளிகளாலான மலை முட்டுக்கள் வருகின்றன.பார்க்கவே சூப்பராக உள்ளது.ஏறிய களைப்பில் அப்பாடா என அமர்ந்தால் நமக்கு நல்ல வசதியாக இடம் உள்ளது.மலையின் ஒரு பகுதியில் மிஸ்ட் உருவாகி வருவது அருமையான அழகு.
                              இங்கு காலை முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி உண்டு.நாங்கள் மாலை சுமார் 6.30 மணிக்கு கிளம்பி அங்கிருந்து நேராக பைக்காரா அருவி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குடியிருப்பில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினோம்.
                            ஊட்டியில் மட்டுமே குளிரை அனுபவிக்க முடிகிறது.மசினகுடியில்  கிடையாது.ஊட்டியில் நாங்கள் தங்கிய இடத்தில் இரவு நேரத்தில் மான்கள் கூட்டம் மிக எளிதாக வந்து செல்கிறது.குளிரும் நல்ல குளிர்.

நான்காம் நாள் பயணம் :

முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் :
                                        பைக்காராவில் கிளம்பி மின்சார வாரியத்தின் நண்பர் ஒருவரின் உதவியுடன் முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் ஆரம்பித்தோம்.இங்கு மின் வாரியத்தின் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.பைக்காராவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் நாம் செல்லும்போதே இடது பக்கத்தில் ஒரு பிரிவு செல்கிறது.காட்டுக்குள் செல்வதற்கு முன்பு சோதனை சாவடி ஒன்று பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.அதனை திறந்து கொண்டு நாம் உள்ளே செல்ல வேண்டும்.அதற்கான சாவி மின்சார வாரியத்தில் உள்ளது.மிக அடர்த்தியான காட்டின் வழி  பயணம்.சாலையோ மிக,மிக சுமார்.(சுத்தமாக ஒன்றுமே இல்லை ) ஆபத்தான பயணம்.ஏனெனில் வாகனம் வழியில் எங்கு நின்றாலும் நாம் யாரிடமும் போன் செய்து கூட பேச இயலாது.சுத்தமாக எந்த மொபைல் போன் டவர் கிடையாது.அடர்த்தியான காட்டு பகுதியாக இருப்பதால் சிறுத்தை,கரடி அதிகமாக உள்ளதாக சொன்னார்கள்.அவை வழியில் வந்தால் மிக சிரமம்.
                          சாலையின் ஒரு பக்கம் அடர்த்தியான காடு.மறுபக்கம் பைக்காரா அணையின் தண்ணீர் பகுதி தொடர்ந்து நம்முடன் பயணித்து வருகிறது.சுமார் ஒன்றரை மணி நேர மிக மெதுவான பயணத்திற்கு பிறகு முக்குருத்தி அணையை அடைந்தோம்.நிற்க .
                           மிக அருமையான அணை கட்டு.அந்த காலத்தில் ஆங்கிலேயர் இந்த இடத்தை கண்டு பிடித்து அடர்த்தியான காட்டுக்குள் மிக பெரிய கற்களை கொண்டு கட்டுமானம் செய்து உள்ளனர்.அப்போதே அவர்கள் கையால் இயக்கக்கூடிய ஷட்டர்,தண்ணீர் அதிகமானால் தானாகவே திறந்து கொள்ள கூடிய ஒரு இயந்திர அமைப்பு என அசத்தி உள்ளனர்.இந்த அணையை வடிவமைத்த பொறியாளர் ,மற்ற அணைக்கட்டுகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டும் வண்ணம் உள் பகுதியில் அணை கட்டு வருமாறு கட்டி உள்ளார்.
                      இங்கு உள்ள தண்ணீர் மிக அருமை.நல்ல சுத்தமான தண்ணீர்.மிக தூய்மையான தண்ணீரில் வசிக்கும் ஸ்காட் மீன்கள் இங்கு வாழ்ந்து வருவதாக சொன்னர்கள்.அந்த காலத்தில் இந்த அணையை கட்டும்போது தண்ணீரை மடை மாற்றி விடும் வண்ணம் வேறு வழி ஏற்படுத்தி உள்ளனர்.மிக பெரிய அதிசியம் இது.
                                                   இங்கு உருவாகும் தண்ணீர் முழுவதுமே ஊற்றுக்குள் இருந்தும்,மலைகளில் இருந்தும் பெருகும் தண்ணீர் தான்.இந்த அணைக்கட்டில் இருந்து அருகில் இருக்கும் மலை பகுதியை பார்த்தால் ஒரு தேவதை படுத்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.மிக அருமையான அணைக்கட்டு.
                             இது தான் நமக்கு நீர் வழி மின்சாரம் தயாரிக்க உதவும் மிக பெரிய அணைக்கட்டு.இங்கு இருந்துதான் தண்ணீர் உற்பத்தி ஆகி பைக்காரா சென்று அங்கு இருந்து கிளன்மார்கன் சென்று அங்கு இருந்து சிங்காரா சென்று மோயாரை அடைந்து பவானி சாகர் ஆற்றுக்கு செல்கிறது.முக்குருத்தி அணைக்கட்டில் நின்று கொண்டு இருக்கும்போது நமக்கு இயற்கையான காற்று ,தண்ணீர் ,நல்ல சீதோஷண நிலை என அனைத்துமே அருமையான அனுபவம்.நாம் நிற்கும் இடத்தில் நம்மை சுற்றி பச்சை பசேல் என்று அருமையான இயற்கை வளம்.மரங்கள்.அடர்த்தியான காடுகள்.

ஆங்கிலேயர் காலத்து ஆய்வு மாளிகை :
                                                           அணைக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது அந்த காலத்து ஆய்வு மாளிகை மிக சுமாரான நிலையில் உள்ளது.அதனில் இருந்துதான் அதிகாரிகள் இந்த அணையை வடிவமைத்து உள்ளனர்.இப்போதும் அங்கு ஒரு பூ செடி மிக அருமையாக பூத்து குலுங்கி கொண்டு உள்ளது.

முக்குருத்தி நீர் மின் நிலையம் :
                                         அணைக்கட்டில் இருந்து கீழே வந்தால் புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் உள்ளது.அங்கு இருந்து அணைக்கட்டின் அழகை நாம் ரசிக்கலாம்.இங்கு அதிகமான அளவில் மந்தி கூட்டம் உள்ளது.

மீண்டும் பைக்காரா நோக்கி பயணம் :
                                                         முக்குருத்தி பயணம் முடித்து மிக கவனமாக எங்கள் வாகனத்தை இயக்கி கொண்டு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் பைக்காராவை அடைந்தோம்.அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.எங்களை அழைத்து சென்றவர் சொன்னார் : இந்த வழியில் எப்போதுமே ஒரு மரம் விழுந்து போக்குவரத்தை பாதிக்கும்.ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் மரம் எதுவும் விழவில்லை.பொதுவாக இது மிக அடர்ந்த கட்டு பகுதியாக இருப்பதால் யாரும் இந்த வழியாக செல்வது இல்லை.மதியம் இரண்டு மணி போல் நாங்கள் பைக்காரா வந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கோத்தகிரி அருகே உள்ள தொட்டபெட்டா நோக்கி வண்டியை செலுத்தினோம்.

தொட்டபெட்டாவின் அழகு :
                                            பைக்காராவில் மதியம் 3 மணி அளவில் கிளம்பி ஊட்டி வழியாக தொட்டபெட்டா மாலை 4.10 மணி அளவில் அடைந்தோம்.தொட்டபெட்டா செல்லும் வழி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒரு வாகனத்துக்கு 40 ரூபாய் முதல் 75 வரை வசூல் செய்கின்றனர்.ஆனால் சாலையோ மிக ,மிக சுமாராக உள்ளது.நிமிடத்திற்கு பல வண்டிகள் சென்று கொண்டும் ,வந்து கொண்டும் உள்ள சாலையை செப்பனிட்டால் நல்லது.
                                          தொட்டபெட்டாவில் இயற்கை அழகை ரசித்தோம்.நாங்கள் செல்லும்போது வான்வெளி வழியாக மிஸ்ட் உருவாகி இருந்ததால் எங்களால் ஊட்டியின் அழகை ரசிக்க இயலவில்லை.ஆனால் நேரடியாக பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது.
                      பசுமை பள்ளத்தாக்கு அருமையானதாக இருந்தது.அங்கு செல்ல ,செல்ல பயம் தான் அதிகம் வருகிறது.சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் வாகனம் வழியாக கோத்தகிரி செல்லும் பாதைக்கு வந்தோம்.

அரசு தேயிலை தோட்டம் :
                                                  தொட்டபெட்டாவில் இருந்து வெளியில் வந்து கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அரசு தேயிலை உற்பத்தி செய்யும் இடம் உள்ளது.மிக பெரிய தோட்டம்.சுமார் 45 நிமிடங்கள் 800 மீட்டர் தூரத்தை தேயிலை தோட்டத்தை ரசித்தபடி சென்று வரலாம்.மலை ஏறி தேயிலை தோட்டத்தை பார்த்தபடி இயற்கை அழகை ரசித்தபடி நடந்தே சென்று மீண்டும் நடந்தே வரலாம்.அருமையான வாய்ப்பு.

தேயிலை உருவான வரலாறு :
                                    நாம் நடந்து செல்லும் பாதையில் ஆங்காங்கே நாம் இளைப்பாறும் வகையில் உட்காரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றின் அருகில் தேயிலை எவ்வாறு உருவானது,அதன் வளர்ச்சி ,அதனை யார் முதலில் தோட்டமிட்டது,இந்தியாவில் யாரால் கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு தகவல்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஆங்காங்கே தேயிலை குடிக்கும் கப் வடிவத்தில் வரைந்து உள்ளே தகவலை கொடுத்துள்ளனர்.பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.

தேயிலை தோட்டத்தை பார்ப்பதற்கு கட்டணம் :
                                    தேயிலை தோட்டத்தின் உள்ளே செல்வதற்கு வாகனத்திற்கும் ,நபர்களுக்கும் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்க படுகிறது.பார்க்க வேண்டிய தோட்டம்.இங்கு இட்லி பூ,சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனங்கள்,ஊஞ்சல் என பல்வேறு பொருள்கள் உள்ளன.அவற்றை பார்த்து ரசிக்கும் வகையில் அழகான புல்  தரைகள் உள்ளன .

தமிழ்நாடு அரசின் தேயிலை விற்பனை:
                                                                           தேயிலை தூள் (ஒரிஜினல் தூள் ) இங்கு விற்கப்படுகிறது.பல விலைகளில் விற்கப்படுகிறது.இதனில் குறிப்பிடத்தக்க விஷயம் ,நாம் ஒரு 45 நிமிடம் மலை ஏறி ,இறங்கி களைப்புடன் வந்த உடன் நமக்கு சுட,சுட இஞ்சி டீ ,சுக்கு டீ ,லெமன் டீ என இலைகளுடன் குறைந்த விலையில் தரப்படுகிறது.அதனை நாம் சாப்பிட்டால் நாம் பயணம் செய்த களைப்பு காணாமல் போய் விடுகிறது.இவ்வாறு நாங்கள் தேயிலை தோட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் கோத்தகிரி நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

காரைக்குடி நோக்கி பயணம் :
                                            மாலை 6 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் விடை பெற்று அங்கிருந்து நாங்கள் கோத்தகிரி,மேட்டுப்பாளையம்,பல்லடம்,அன்னுர் ,தாராபுரம்,ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் ,நத்தம்,கொட்டாம்பட்டி,திருப்பத்தூர் வழியாக இரவு ஒரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.


சுற்று பயணத்தில் உணவு - சாப்பாடு தொடர்பாக :
                             
                                               முதல் நாள் காலை மேட்டுபாளையத்தில் அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டோம்.
                                            முதல் நாள் மதியம் முதல் மூன்றாம் நாள் காலை வரை நாங்கள் மசினகுடியில் உள்ள ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டோம்.இங்குதான் நாம் சாப்பிடும் உணவு நமக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை.மேலும் விலையும் சரியானதாக இருந்தது.இடையில் ஒரு வேளைக்கு மட்டும் சஃபாரி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டோம் .அங்கு அனைத்து உணவுகளும் விலை அதிகம்.அதோடு உணவு பொருள்களும் சுமாரான டேஸ்டுடன் இருந்தன.


பைக்காரா உணவு விடுதிகளில் விலை வித்தியாசம் :

                                      மூன்றாம் நாள் மதியம் பைக்காரா அருவி அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டோம்.பைக்காராவில் உள்ள உணவு விடுதிகளில் உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் ஒரு விலை .தெரிந்தவர்கள் யாரேனும் இல்லை என்றால் கடைக்காரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உணவு விலை சொல்லுகிறார்கள்.வருபவர்களும் ஒரு வேளைமட்டும்தானே என்று கேட்கும் காசை கொடுத்து செல்கின்றனர்.எனவே பைக்காராவில் சாப்பிடும்போது கவனமாக சாப்பிடுங்கள்.
                                            மூன்றாம் நாள் இரவு,நான்காம் நாள் காலை ஆகிய இரண்டு வேளையும் அருமையான உணவு சாப்பிட்டோம்.மின்சார துறையின் நண்பர் வழியாக ஆய்வு மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கு சப்பிட்டோம்.இரவு சப்பாத்தியும்,காலையில் இட்டலியும் அருமையாக செய்து கொடுத்தார்கள்.நான்காம் நாள் மதியம் மீண்டும் பைக்காரா அருவி அருகே உள்ள ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம்.அருமை.

ஹோட்டலில் தங்கிய இடம் :
                           மேட்டுப்பாளையயத்தில் முதல் நாள் இரவு காவேரி இன்டர்நேஷனல் என்கிற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.நன்றாக இருந்தது.முன்னதாக மயூரா என்கிற ஹோட்டலில் ரூம் புக் செய்தோம்.ஆனால் இரவு 12 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று ஹோட்டலில் விசாரிக்கும்போது,அப்போது ரூம் இருந்தது ,இப்போது  இல்லை.வேண்டுமானால் டபுள் ஏசி ரூம் ( கட்டணம் அதிகம் ) இருக்கிறது.தங்கி கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்கின்றனர்.பிறகு மீண்டும் நண்பர்களிடம் முன்பே விசாரித்து வைத்ததன் அடிப்படையில் காவேரி ஹோட்டலுக்கு சென்று ரூம் எடுத்து தங்கினோம்.
                                      மசினகுடியில் மூன்று நாட்களும் ஹோட்டல் ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் தங்கினோம்.நல்ல காற்றோட்டமான அறை .வெண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.அங்கு உள்ள உதவியாளரும் நன்றாக உதவியாக இருந்தார்.இந்த ஹோட்டலின் அருகில் சாப்பிடும் இடம்,மெயின் ரோடு,என அனைத்து வசதியும் உள்ளது.

 உங்கள் பயணம்   இனிதாக அமைய வாழ்த்துக்கள்
-கல்விசிறகுகள்

விவரங்களுக்கு
லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி.
சிவகங்கை மாவட்டம்.
chokkalingamhm@gmail.com

ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? ஒரு அலசல்


Click Here
http://techtamila.com/google/what-will-be-the-name-of-the-next-android-version/


share with your friends
To get More Tech News Add +918189903696 in whatsapp group else send TTnews to join our broadcast List

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அறிவுரை- முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடல்- ஹுவாய் நிறுவனம்


சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் 512 GB ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை வடிவமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சீன போன்கள் என்றாலே போலியானவை என்ற கருத்துக்கள் மாற்றமடைந்து பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் ஹுவாய் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் p10 என்ற மாடல் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிய மாடல் குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை ஹுவாய் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயனர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் நிறுவனம் 512GB ஸ்டோரேஜ் கொண்டு ஒரு மாடலை தயாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. ஹுவாய் நிறுவனம் இந்த புதிய மாடலில் 40 MP கேமரா வசதியை சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லேப்டாப்களின் ஸ்டோரேஜ்ஜிற்கு இணையாக இந்த புதிய மாடல்களில் ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது போல், ப்ராசெஸ்சர் மற்றும் திரையளவும் சரியே அமையும் பட்சத்தில் லேப்டாப்களை அதிகம் பயனர்கள் வாங்குவதை விடுத்து இதுபோன்ற மாடல்களை வாங்கிச்சென்றுவிடுவர்.

ஹுவாய் நிறுவனத்தின் புதிய மாடல் குறித்து வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இந்த மாடல் குறித்த பிற தகவல்களை ஹுவாய் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க கல்வித்துறை உத்தரவு


ஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்- தினமும் ரூ 500 அபராதம்


ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?


இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் ஏக்டிவேட்

நாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு சநதா திட்டம் , மார்ச் 31, 2018 வரை நிறைவுறுவதனை தொடர்ந்து, அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ?

இந்நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான பல்ன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் அல்லாதவர்கள்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவன செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழும்.

தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி இதுவரை பிரைம் மேற்கொள்ளாதவர்கள் இன்றைக்கு ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை இந்த திட்டத்தை பெறலாம்.

கடந்த வருடம் அல்லது இடையில் ரீசார்ஜ் செய்தவர்கள் 2019 வரை பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து காணலாம், எவ்விதமான வழிமுறையும் இன்றி தானாகவே அடுத்த ஆண்டிற்கு பிரைம் சந்தாவை ஜியோ புதுப்பித்துக் கொள்ளும். உங்களுக்கு பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதா என அறிய மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அபாரம்..... வீடு, வீடாக சென்று கல்வி சீர் கொடுத்து மாணவர்களை சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.....


புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்-ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்

ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன. இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக குறையும். 
மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் 2,018 காலியிடங்களே ஏற்படும். இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடக்க உள்ளது. தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றிய சீனியாரிட்டியே கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


THE COMPLETE LIST OF ENGLISH VERB TENSES

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு


மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

 அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவி பெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த இடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது .

இந்த மனுவை அரசு பரிசீலிக்காததால் 4 பேர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தபோது அரசு ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெறாமல் இருப்பதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்கத் தமிழக அரசுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்.

AN EASY WAY TO MAKE QUESTION IN ENGLISH

Friday, March 30, 2018

பள்ளிக்கு வேன் வசதி, Smart Class Room வசதி, கட்டிட வசதி, இவையெல்லாம் தன்னார்வலர்களிடம் நன்கொடையாகப் பெற்ற 125 ஆண்டுகால அரசுப்பள்ளியின் முதல் ஆண்டுவிழா






பொதுமக்கள் பள்ளிக்கு நிரந்தர நிதியாக 1,74,000 ரூபாய் கொடுத்து கொண்டாடிய பள்ளி நூற்றாண்டு விழா










பள்ளி நூற்றாண்டு விழா
 28/3/2018 மாலை 4:30க்கு சிறப்பு அழைப்பாளரான திரு. K. வாசு இணை இயக்குனர் SCERT சென்னை, AEO, புதிய தலைமுறை கல்வி இதழ் ஆசிரியர் மோ. கணேசன் மற்றும் நன்கொடையாளர்கள்   அவர்களை மேளதாள நாதஸ்வர இசையும் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர்.
மேலும் நூற்றாண்டு விழா கல்வெட்டினை திறந்து வைத்து, மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.
 இணை இயக்குனர் குத்துவிளக்கு ஏற்ற நூற்றாண்டு விழா ஓளிர தொடங்கியது.
பள்ளி தொடக்க காலத்தில் நிலம், கட்டிடம், நிதி வழங்கியவர்கள், பள்ளியில் பணியாற்றிய முன்னாள் த.ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி சார்பில் கௌரிக்கபட்டனர். பின்பு பள்ளிக்கு நிரந்தர நிதியாக 1,74,000 ரூபாய் PTA அவர்களிடம் மாநெல்லூரை சார்ந்தவர்கள் மனமுகந்து வழங்கினார்கள்.
பின்பு மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது,
1. வில்லுப்பாட்டு_ பள்ளி வரலாறு
2. பின்னல்கோலட்டம்
3. பிரம்மிடு
4. கிராமிய நடனம்
5. ஒயிலாட்டம்
6. கரகாட்டம்
7. கும்மிபாட்டு
8. கதை கூறுதல்
9. மதநல்லிணக்க நாடகம்
10. தனி பாடல், பெண்மையைப் பற்றிய பேச்சு
11. ராஜஸ்தானி நடனம்
12. நாடகங்கள்
13. மாறுவேடம்
மற்றும் பல. விழா இனிதாக முடிந்தது.
நன்றி நன்றி நன்றி

பாடத்திட்டத்தில் பொம்மலாட்டம் எனப்படும் பாவைக்கூத்து இடம்பெறுமா? -பாவைக்கூத்து கலைஞர் மு.கலைவாணன்


பாவைக்கூத்துக்காக தன்னை அர்ப்பணித்து தொடர்ந்து இயங்கும் கலைஞர் மு.கலைவாணன் உடன் ஓர் நேர்காணல்!

இந்த தலைமுறைக்கு ‘பொம்மலாட்டம்’எனப்படும் பாவைக்கூத்து தொலைவில் இருக்கும் அரிய கலை. சில தலைமுறையின் நினைவுகளில் பாவைக்கூத்து மாறாமல் இடம் பெற்றிருக்கலாம். இந்த தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் விரிசலை பாவைக்கூத்தை வைத்தே நிறைக்க முடியும் என நிரூபிக்கிறார் பாவைக்கூத்து கலைஞர் மு.கலைவாணன்.

அவரோடு கல்விசிறகுகள் நடத்திய உரையாடலின் தொகுப்பு இதோ...!

நீங்க பாவைக்கூத்து யார் கிட்டயிருந்து கத்துக்கிட்டீங்க ?

நான் பிறந்தது சென்னையில. எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சிருக்கேன். நான் யார் கிட்ட இருந்தும் பாவைக்கூத்து கத்துக்கல. பள்ளிக்கூடத்துலயே டீச்சர் அசஞ்சு அசஞ்சு பாடம் நடத்துவாங்க இல்ல? அவங்கள மாதிரியே பேப்பர்ல வரைஞ்சு பசங்க கிட்ட அத ஆட்டி காட்டுவேன். அவங்க அதைப் பார்த்து ரசிச்சவுடனேயே, அதே மாதிரி கத்திரிக்காய் உருளைக்கிழங்குல எல்லாம் பொம்ம செஞ்சு சும்மா விளையாட்டா பொம்மலாட்டம் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்.



என்னோட அப்பா, கவிஞர் முத்துக்கூத்தன்னு பேரு, அவர் நாடக நடிகராகவும் சினிமாவுல அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் இருந்தாரு. அவரும் நானும் சேர்ந்து பொதுவெளில நிகழ்ச்சி நடத்தலாம்னு ஐடியா பண்ணி எழுபத்தி ஆறுல பண்ணத்தொடங்குனோம். கடந்த 42 வருஷமா இதைப் பண்ணிட்டு இருக்கேன்.

தமிழ்நாட்டுல நாலு வகையான பாவைக்கூத்து இருக்கு. ஒண்ணு, கயிறு கட்டி ஆட்டுற மரப்பாவைக்கூத்து. ‘இந்தியன்’ படத்துல வர்றது இது தான். தமிழ்நாட்டுல நிறைய காலமா இருக்குற பொம்மலாட்ட வடிவம் அது தான். ‘தசாவதாரம்’ படத்துல வர்றது தோல்பாவைக்கூத்து. நிழல்பாவைக் கூத்துனு ஒண்ணு இருக்கு. அது இல்லாம ராட் பப்பெட்னு (rod puppet) சொல்லுவாங்க - ஆந்திராவுல உத்திர பிரதேசத்துல இது இருக்கும். பொம்மையோட கைக்கு ஒரு கம்பி இருக்கும் உடம்புக்கு ஒரு கம்பி இருக்கும். தோள்கள்ல மூங்கில் குச்சி இருக்கும் - அத வெச்சு ஆட்டுவாங்க. நான் செய்யறது ‘க்ளவ் பப்பெட்’. அதாவது பொம்மைக்குள்ள கைய விட்டு ஆட்காட்டி விரலை தலைக்கும், கட்டைவிரலையும் நடுவிரலையும் உடம்புக்குமா வெச்சு செய்யறது.

நீங்க எதைப் பத்தியெல்லாம் கதை சொல்லுவீங்க?

பாவைக்கூத்து நடத்துற மற்ற எல்லோருமே இராமாயணம், மகாபாரதம், நல்ல தங்காள் கதை மாதிரியான கதைகளை தான் சொல்லுவாங்க. காரணம், புதுசா கதையோ உரையாடலோ எழுத வேண்டியது இல்ல. ஏற்கனவே நாடகமா இருக்கும்.

“ஆனா நான் செய்யுற பாவைக்கூத்து எல்லாமே சமூக கருத்துக்கள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களின் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு, பூமி வெப்பமயமாதல், மனித உரிமை, நீர் மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு - இந்த மாதிரியான விஷயங்கள்.”

ஆறாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன் ; தூர்தர்ஷன் வசந்த டிவில எல்லாம் முந்நூறு நிகழ்ச்சிக்கு மேல பண்ணிருக்கேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு தயாராவதற்கு உங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு?

முதல்ல நீங்க சொல்ற கான்செப்ட நான் புரிஞ்சிக்கணும். அது தொடர்பா நிறைய தகவல்களை தெரிஞ்சுட்டு ஸ்க்ரிப்ட் தயார் பண்ணனும். ஸ்க்ரிப்ட் தயார் பண்ணிட்டு அதுக்கு பொம்மை செய்யணும். என்கிட்ட இருக்க முந்நூறு பொம்மையுமே நான் செஞ்சது தான். காகிதக்கூழ், சுக்கா மாவெல்லாம் பயன்படுத்தி முன்னாடி செஞ்சிட்டு இருந்தோம். இப்போ ஃபைபர்ல மோல்ட் போட்டு பொம்ம செய்றோம். புதுசா ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி தொடங்குனோம்னா எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் ரூபா செலவு ஆகும்.

எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துவீங்க?

நீங்க என்னை கூப்பிட்டீங்கனா, நான் வந்து நிகழ்ச்சி நடத்தி தருவேன். நானா போய் டிக்கெட் போட்டு புரோக்ராம் நடத்துனது இல்ல. சமூக விழிப்புணர்வுக்காக வேல செய்றவங்க, என்.ஜி.ஓக்கள் எல்லாம் என்னை புரோக்ராம் நடத்த கூப்பிடுவாங்க. தமிழ்நாட்டுல ஒரு இரண்டாயிரம் என்.ஜி.ஓக்கள் இயங்குதுன்னா, அத்தனை பேருக்குமே என்னை நல்லா தெரியும். முழு நேர வேலையா செய்றதால, இதுல வர்ற வருமானம் போதுமானதா இருக்கு. போதுமானதுன்னு சொல்றதவிட மனநிறைவா இருக்கு.

எந்த மாதிரியான பார்வையாளர்கள் பாவைக்கூத்தை ரசித்து பார்க்குறாங்க?

நிறைய படித்த மக்கள்ல இருந்து ஒண்ணுமே தெரியாத கிராமத்து மக்கள் வரை எல்லார் முன்னாடியும் நான் நிகழ்ச்சி நடத்திருக்கேன். ஹாஸ்பிட்டல்ல பேஷண்டுகளுக்கு மத்தியில் நடத்திருக்கேன், பெரிய ஆடிடோரியத்துல நடத்திருக்கேன், கரண்டு இல்லாத கிராமத்துலயும் போய் நிகழ்ச்சி நடத்திருக்கேன். எல்லாருக்குமே பொம்மைகள் பிடிக்கும். குழந்தைகளுக்கு பொம்மைகள் பிடிக்கும். பெரியவங்களுக்கு பொம்மை பிடிக்குமான்னா? பிடிக்கும்.  அவங்களுக்கு சிலையாகவோ, கடவுள் உருவமாகவோ எப்படியோ பிடிக்கும். பொம்மைய வச்சு கதை சொல்றதை கொஞ்ச நேரமாவது நின்னு பார்க்கணும்னு தோணும்.

சொல்லப்படுற கருத்து அவங்களை ஈர்க்கும் போது நிறைய நேரம் இருந்து பார்ப்பாங்க. பெரிய பெரிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் பார்த்து வியந்து பாராட்டுனது தான் பாவைக்கூத்து.

நீங்க வாங்குன விருதுகள் பற்றி ?

எண்பத்து ஆறுல சென்னையில் இருக்க இலக்கிய வீதின்னு ஒரு அமைப்பு பொற்கிழி  கொடுத்து பாராட்டுனாங்க. 2014 ல BAPASI (Book Sellers and Publishers Association of South India) - புத்தக கண்காட்சிகள் எல்லாம் நடத்துற அமைப்பு - அவங்க கலைஞர் பொற்கிழி விருது கொடுத்தாங்க. ஆழ்வார் ஆய்வு மையம் சான்றோர் விருது கொடுத்தாங்க, முத்தமிழ் மன்றம் பெரியார் விருது கொடுத்தாங்க. இப்போ சமீபத்துல லயோலா வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்காங்க.

பாவைக்கூத்தை கத்துக் கொடுக்கற முயற்சி எதாவது செய்றீங்களா?

ஆமா. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஆசிரியர்களுக்கு பாவைக்கூத்து வகுப்பு நடத்துறோம். ஆரம்பப்பள்ளில பாடம் நடத்துறாங்க இல்லையா, அதை பாவைக்கூத்து வழியா செஞ்சா ரொம்ப ஈஸியா மாணவர்கள் பாடத்தை புரிஞ்சுப்பாங்க. கேட்குற விஷயங்களை விட பார்க்குற விஷயங்கள் தான் நம்ம மனசுல நல்லா நிக்கும். ஐந்தில் இருந்து பத்து வயசு வரைக்கும் இருக்குற குழந்தைகளுக்கு டீச்சர் கையில பொம்மை வச்சு பாடம் சொல்லிக் கொடுத்தா நல்ல ரீச் இருக்கும். மனசுல ஆழமா பதியும்.

கூடவே, ஊடகத்தோட தாக்கத்தால அழிஞ்சுட்டு இருக்க பொம்மலாட்ட கலையை காப்பாத்த இது ஒரு நல்ல யுக்தி. டி.வி வந்ததுல இருந்தே எல்லாரும் வெளிய வர்றது ரொம்ப கொறஞ்சிடுச்சு. இன்னைக்கு நான் பாவைக்கூத்து நடத்துறேன். ஆனா, நாளைக்கு என் பசங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா?

இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள்ல மாரல் (moral science) பீரியட் கிடையாது, டிராயிங் பீரியட் கிடையாது, கிராஃப்ட் பீரியட் கிடையாது, பாட்டு கிளால் எல்லாம் கூட இல்லை. எல்லாரும் மதிப்பெண் நோக்கி ஓடுற இடமா பள்ளிக்கூடங்கள் இருக்கு. அது கல்வியே கிடையாது.

நூறு வார்த்தையை மனப்பாடம் செய்றவன் திறமையான மாணவன் கிடையாது; நூறு வார்த்தைகளை புதிதாக க்ரியேட் செய்பவன் தான் புத்திசாலி. இதற்கு கலை வழியா கற்பிக்கப்படுற கல்வி உதவும். இப்போ அரசாங்கம் பள்ளிக்கூடத்துல எல்லாம் செயல்வழி கற்றல் மாதிரி நிறைய நுட்பங்கள யூஸ் பண்ணுறாங்க. அந்த மாதிரி பாவைக்கூத்தை பாடத்திட்டத்தில் ஒரு வடிவம் ஆக்கணும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One