எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த கௌரவம்

Tuesday, March 27, 2018


1955 ல் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பும்,
பாரம்பரீயமும் மிகுந்த
*புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில்* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
 3 நாள் பணியிடைப் பயிற்சி  நடைபெற்றது.

பயிற்சியின் நிறைவுநாளில் எதிர்பாராமல் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கல்லூரியில் தேசியக்கொடியினை ஏற்றும் வாய்ப்பும், மரியாதையும் கவிஞர்,எழுத்தாளர்,பேச்சாளர் என பல பரிமாணங்கள்  கொண்ட கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சதிஷ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அக்கல்லூரியில் பயிலும் BEd,MEd பயிலும் மாணவர்கள் மத்தியில் உரையாடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது தனது பணிக்கு கிடைத்த பெருமையாகவும் பெருமிதமாகவும் உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

ஆசிரியர் சி.சதிஷ்குமார் எழுதிய *இந்தப்புத்தகம்* என்னும் நூல் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 25 புத்தகங்கள் மட்டும் கல்லூரியின் முதல்வர் அவர்களிடத்தில் கொடுக்கப்பட்டது.

1 comment

  1. வாழ்த்துகள் சதிஷ் சார்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One