எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மண்டல அளவிலான தடகளப்போட்டியில் அன்னவாசல் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

Tuesday, March 27, 2018


மண்டல அளவிலான தடகளப்போட்டியில் அன்னவாசல் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை..அன்னவாசல்,மாரச்,26: சர்வதேச அளவில் திறமையானவர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டுக்கு கல்வி மாவட்டங்களுக்கிடையேயான மண்டல் அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்றது..இப்போட்டியில் கல்வி மாவட்ட அளவில் முதல்  இரண்டு இடங்களை பிடித்தவர்கள் கலந்து கொண்டனர்..பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்ராபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி இரா.ஜெயராணி ஆறாம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்...போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது குறித்து ஜெயராணி நம்மிடம் கூறியதாவது: எனது சொந்த ஊர் மேலகோத்ராபட்டி...நான் கோத்ராபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்...எனது தந்தைபெயர் இராமசாமி தாய் பெயர் தனலெட்சுமி...எனது அப்பா அம்மா கூலி வேலை செய்து வருகிறார்கள்.எனக்கு சிறு வயதிலேயே இருந்து விளையாட்டின் மீது ஆர்வம் உண்டு...ஒன்பதாவது வகுப்பு படிக்கும் எனது அக்கா செல்வராணியோடு எனது வீட்டின் அருகே உள்ள காட்டுக்குள்ளே பயிற்சி எடுப்பேன்...முதன் முதலாக மேட்டுச்சாலையில் நடைபெற்ற  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான தடகளப்போட்டியில் கலந்து கொண்டு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தேன்.அப்பொழுது தான் எனக்குள் உள்ள திறமையை உணர்ந்தேன்..எனது அப்பா அம்மா என்னை பாராட்டினார்கள்..ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..அதன் பிறகு புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் 27.2.18 அன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்தேன்..முதலிடம் பிடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது...அதன் பிறகு எனக்கு 14-03-2018 திருச்சியில் நடைபெறும்  மண்டல் அளவிலான போட்டியில் 25.03.18 அன்று   கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் வந்தது. கடிதம் வந்த நாளில் இருந்து எனது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு தினமும் 3 மணிக்கு மேல் ஓட்டப் பயிற்சி அளித்தனர்..திருச்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.நான் ஏற்கனவே ஓடிய புதுக்கோட்டை மைதானத்தை விட இந்த மைதானம் நன்றாக இருந்தது...ஆனால்  என்னுடன் ஓடுவதற்கு  தயாராக இருந்தவர்களை பார்த்தவுடன் பயம் வந்து விட்டது..அவர்கள் எல்லாம் என்னை விட உயரமானவர்களாகவும்,யூனிபார்ம் ஆடைகளோடும்,காலில் ஷூ அணிந்தும் இருந்தனர்.இருந்தாலும் இந்த முறை எனது விளையாட்டை காண எனது அப்பா,அம்மா ஆசிரியர்கள் உடன்  வந்ததால் எனக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது...ஆரம்பத்தில் பத்தாவது ஆளாக ஓடிய நான் எனது அப்பா முன் வெற்றி பெற்று அவருக்கு சந்தோசத்தை கொடுக்க வேண்டும் என நினைத்து வேகமாக ஓடி முதலிடத்தை பிடித்தேன்..நான் முதலிடம் பிடித்த செய்தியை கேட்டவுடன் என் அம்மா அப்பா பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்ல..நானும் மிகுந்த சந்தோசப்பட்டேன்...அதன் பிறகு அவர்கள் எனக்கு பதக்கமும்,ஆறாயிரம் பரிசும் சான்றிதழும் வழங்கினார்கள்..எனது ஆசையெல்லாம் விளையாட்டிலும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே...எனக்கு திருச்சி போன்ற விளையாட்டு மைதானங்களில் முறையாக பயிற்சி அளித்தால் நிச்சயம் என்னால் தடகளத்தில் சாதிக்க முடியும் என்றார்..இது குறித்து வகுப்பாசியர் அ.இரவிச்சந்திரன் கூறியதாவது: விளையாட்டில் சாதிப்பதற்கு எங்கள் பள்ளி  மாணவிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம் அனைத்து ஆசிரியர்களும்...திருச்சியில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் வந்தவுடனேயே அருகில் புதர் மண்டிக் கிடந்த இடத்தை சீர் செய்து பயிற்சி அளித்தோம்..விளையாட்டில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கும் எப்பொழுதுமே தனிக்கவனம் செலுத்துவோம்..எங்கள் பள்ளியில் மொத்தம் 290 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். மாணவர்களிடம் விளையாட்டுத் திறமை உள்ளது ஆனால் சரியான அளவில் மைதான வசதிகள் இருந்தால் இன்னும் திறமையான மாணவர்களை உருவாக்குவோம்..அரசுப் பள்ளியை அலட்சியப்படுத்த கூடாது..தனியார் பள்ளிக்கு மேலாக படிப்பிலும் விளையாட்டிலும் அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம்..எங்கள் பள்ளியில் படித்த பரமசிவம்  2012-13 கல்வி ஆண்டில்  மண்டல அளவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்து சாதனையை படைத்தார்  என்றும் இந்தாண்டு நடைபெற்ற குறுவளமைய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எம்பள்ளியானது முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது என்றார்..வெற்றி பெற்ற மாணவியை உதவித் தொடக்கல்வி அலுவலர் பொன்னழகு,கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சீனி.இராமச்சந்திரன்,தலைமைஆசிரியை சகாயராணி மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டினர்..இவண்.. கு.முனியசாமி M.A,B.Ed ஆசிரியர்..உருவம்பட்டி...

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One