எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'

Friday, June 29, 2018

'மதிய உணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை,
ஒவ்வொரு மாதமும் அளித்தால் தான், நிதியுதவி வழங்கப்படும்' என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் நிதிஉதவியின் கீழ், மாநில அரசு பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எண்ணிக்கை
மாநில அரசு அளிக்கும் மாணவர் எண்ணிக்கையை வைத்து, நிதிஉதவி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாததால், சராசரி எண்ணிக்கையை, மாநில அரசுகள் அனுப்பி, அதிகஅளவு நிதியை பெறுகின்றன.இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:மதிய உணவு திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதை தடுக்க, இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரிந்துவிடும்.ஒவ்வொரு மாதமும், மாணவர்களின் எண்ணிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், நிதி வழங்கப்படும்.

நடவடிக்கை
மேலும், மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த, சமூக தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மக்கள் அடங்கிய குழு, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One