எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட முடியுமா?

Saturday, June 30, 2018


ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட முடியுமா?
தினசரி வேலைப் பளுவில் தொடக்கக் கல்வித் துறையில் அடி நாதம் வரை ஊடுறுவி உள் இயங்க முடியுமா?
இலட்சக்கணக்கான ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மீது உயர்தனிக் கவனம் செலுத்த முடியுமா?
எல்லாவற்றிற்கும் ஒற்றை விடை திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்கள்.

மாவட்டம் முழுதும் தமிழை வாசிக்க வைத்து சாதனை படைத்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து, அத்துணை குழந்தைகளும் ஆங்கில வாசிப்புத் திறனில் மேம்பட Teaching of English by Phonetic method என்ற ஆகப் பெரும் முயற்சியை கையெடுத்துள்ளார்.

அப்படி என்ன விளைவுகள் ஏற்பட்டு விடும்?
1.எல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கும் Phonetic training அளிக்கப்பட்டு வகுப்பில் தன்னம்பிக்கையாக செயல்பட வைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

2.திரு.ஐயப்பன், திரு.அமலன் ஜெரோம்,திரு.கண்ணன் அவர்களின் தலைமையில், இத்திட்டத்தை உருவாக்கிய இவர்களைக் கொண்டே மாவட்டம் முழுவதும் பயிற்சிகள் சீரிய முறையில்  இயக்கி விடப்பட்டுள்ளன.

3.இனி ஆசிரியர்கள் பாடம் நடத்தியே ஆக வேண்டும். ஏனெனில் 43 நாட்களுக்குள் குறைந்தது 5000 ஆங்கில வார்தைகளையாவது இம்முறை வழிகாட்டலில் வாசிக்க வைக்க வில்லையெனில் முழுப் பொறுப்பு அவர்களே ஏற்றாக வேண்டும்.

4.தற்போது வரை திருவண்ணாமலை மாவட்ட 3 ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.தண்டராம்பட்டு ஒன்றிய ஆசிரியர்களுக்கு இப்போதும்,அடுத்து செங்கம் ஒன்றியம்,பிறகு இதர ஒன்றியங்களுக்கும் பயிற்சிகள் வீரியப்பட அத்தனை வேலைகளிலும் மாவட்ட அதிகாரிகள் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

5.surprise visitக்கான குழுக்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் இவர்கள் மாவட்டம் முழுதும் சுழன்று கொண்டே இருப்பார்கள். கற்றுக் கொடுப்பவர்கள் பாராட்டப்படுவர்.அன்றன்றைய இலக்கை எட்டாதவர்கள் on the spot அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு வரப்படுவர்.

6. Phonetic DVD, Teacher's Module, students word cards book போன்ற supporting materials கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

திருவண்ணாமலை ஆசிரியர்கள் மிக ஆர்வமாக பயிற்சிகளை மேற்கொண்டு ஆங்கில வாசிப்பில் அக்கறை எடுத்து வருகிறார்கள்.இந்த முதல் பருவம் முடிவதற்குள் இந்த மாவட்டம் எல்லா மாவட்டங்களையும் விட ஆங்கில வாசிப்பில் முதன்மை பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடிப் பார்வையில் இத்திட்டம் இருப்பது கூடுதல் பலம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் Phonetic என்னும் தீபம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பற்ற வைக்கப் பட்டிருக்கிறது.இது இலட்சோப இலட்சம் அரசுப்பள்ளிக் குழந்தைகளின் நலனில் ஜோதியாய் பகிரப்பட்டு,
ஒளிர்விக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One