எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த 5 ஆயிரம் மாணவர்கள் புத்தகம் வாசிப்பு

Wednesday, July 11, 2018


ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த புத்தகம் படித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய  5 ஆயிரம் மாணவர்கள்
ஒசூர் அருகே உள்ள கோனேரிப்பள்ளியில் இயங்கிவரும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் தொடர்ந்து வாசித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாணவர்களிடையே புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த செவ்வாய்க்கிழமை பிஎம்சி கல்லூரியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் கூடி, தொடர்ந்து புத்தகம் வசித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வரும் ஜூலை 13-ஆ ம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை 7-ஆவது உலக புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. அதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் , விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
உலகப் புகழ்பெற்ற புத்தகங்களை ஒரே இடத்தில் வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. 10 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப் பட உள்ளன. புத்தகம் வாசிப்பது குறித்தும் , மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் 5 ஆயிரம் மாணவர்கள் ஒசூரில் உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் ஒன்று கூடி, தொடர்ந்து புத்தகம் வாசித்தனர். கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி திருக்குறள், புகழ் பெற்ற அறிஞர்களின் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள் என தொடர்ந்து வசித்தனர். அனைத்து மாணவர்களுமே ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரித் தாளாளர் பெருமாள், செயலாளர் பி.குமார், அறங்காவலர் பி.மலர், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One