எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?

Sunday, July 22, 2018


டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசு அண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.

தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

3 comments

  1. I am kalaiyarasan my qualification D.T.ED,M.SC,M.ED (MATHS)
    I PASSED PAPER 1 AND I GOT 94 MARKS
    MY AIM TO BECOME A GOOD TEACHER
    ITHU NADUKUMA

    ReplyDelete
  2. I'm yamuna, I am waiting for 10years, I'm passed in paper 1 in 2013.still I didn't get job.

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் நிரைய பேர் வேலை இருந்தும் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய மாட்டேங்குராங்க ஒரு போனுக்கு பதில் இல்லை,எந்த வேலையும் செய்யாமல் சும்மா சம்பளம் வாங்குராங்க உங்களுக்கும் ஒரு தேர்வு வெச்சு மறு சீரமைப்பு பண்ணலாமே
    இல்ல எல்லாரையும் தூக்கிட்டு புதுசா தேர்வு வச்சு நியமனம் செய்யலாமே

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One