எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளிக்கு மெல்ல கற்போரின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்க பயிற்சிப் புத்தகம்

Friday, July 12, 2019


மகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிக்கு மெல்ல கற்போரின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்க பயிற்சிப் புத்தகம் அளிப்பு!

M3 எனும் மகிழ்வித்து மகிழ் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான எளிய ஆங்கில உச்சரிப்பு முறையில் வாசிப்பை மேம்படுத்தும் விதமாக, அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி. கணேசன் விடுத்த அன்பான வேண்டுகோளை ஏற்று நல்ல தரமான ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிப் புத்தகங்களைத் திருச்சியிலிருந்து நூலாசிரியர் திரு செல்வகுமார் மூலமாகப் பெற்று வழங்க நிதியுதவியை  உறைக்காட்டுப்பேட்டை இளங்கோ இலக்குமியம்மாள் அறக்கட்டளை நிறுவனரும் மதிப்புறு முனைவருமான திருமிகு இள.பாண்டியன் பள்ளிப் பிள்ளைகள் நலன் கருதி வழங்கிய உதவிகள் அனைத்து மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் முறையே அளிக்கப்பட்டன. பள்ளி மற்றும் M3 சார்பில் பேரிடரில் பேருதவி புரிந்த அறக்கட்டளை நிறுவனர் இள. பாண்டியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One