நாட்டில் 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்குத் தீர்வு காணும் விதமாக கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளை தகுதித் தேர்வுகள் மூலம் நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் முக்கியப் பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக உரிய முடிவுகள் எடுக்கப்படாமல் சில திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. போதிய அதிகாரிகள் இல்லாததே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நாடு முழுவதும் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சிப் பணியில் இருக்கலாம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 5,004 அதிகாரிகள் மட்டுமே இருக்கின்றனர். 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆண்டொன்றுக்கு 180 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய குடிமைப் பணிகள் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வரை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2,490 சொத்துகளுக்கு முடக்கம்: இதனிடையே, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ''தில்லியில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட 2,490 சொத்துகள் கடந்த 4 மாதங்களில் முடக்கப்பட்டுள்ளன'' என்றார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் புது தில்லி பெரு நகர மாநகராட்சிகள் சார்பில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கங்கை திட்டத்துக்கு ரூ.3,633 கோடி: மக்களவையிலும் கேள்வி நேரத்தின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டன. அவற்றில் கங்கை நதியின் வழித்தடத்தில் உள்ள படித்துறைகளைத் தூய்மைப்படுத்துவது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கங்கை நதியை ஒட்டியுள்ள 361 படித்துறைகளை அழகுபடுத்தவும், தூய்மைப்படுத்தவும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 228 படித்துறைகளில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது

No comments:
Post a Comment