எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

Wednesday, March 28, 2018

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார்.

நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக அனைத்து வைப்புநிதி சந்தாதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணை செயல்படுத்திய பிறகு வங்கிக்கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை (வ.வை.நி.நி.) உறுப்பினர் தளத்தின் மூலம் சமர்ப்பித்து தனது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் ஒப்பம் மூலம் வரும் 31.3.2018க்குள் செயலாக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது குறைபாடோ இருப்பின் வைப்புநிதி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் முதல் கட்டமாக கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் வரும் 1.4.2018 முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தாவை உரிய காலத்தில் செலுத்தி நிலுவையில்லா நிறுவனம் என்ற நிலையை அடைவதற்காக தனிக்குழு உதவி ஆணையர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களில் வைப்பு நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கையான வங்கிக்கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்தல், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுநாள் வரை பி.எப். சட்டதிட்டங்களுக்குள் தங்களை இணைத்து கொள்ளாத தகுதியான நிறுவனங்கள் உடனடியாக இதில் இணைத்து தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் உறுதுணையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க விருப்பப்பட்டால் நாகர்கோவில் வைப்பு நிதி மக்கள்தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களையும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One