பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலான, சி.ஓ.ஏ., நடத்தும், நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான ஆன்லைன் தேர்வு, 2017 முதல் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும், ஒரே நாளில் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'நாட்டா' தேர்வு, ஏப்., 29ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜன., 16ல் துவங்கியது.தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின், http://www.nata.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் பதிவு செய்தனர். நேற்றுடன் பதிவுகள் முடிந்தன. இதில், நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக, சி.ஓ.ஏ.,வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment