எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு

Monday, March 26, 2018

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரோட்டில் திமுக சார்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் தமிழக மாணவர்களுக்கு 1232 இடங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2019-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1781 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாகவும் நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1501 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டுவிட்டதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 98.5 சதவீதமுள்ள மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 2314 இடங்கள் தான் கிடைத்துள்ளன. 1.5 சதவீதமுள்ள சிபிஎஸ்இ மாணவர்கள் நீட் தேர்வால் 1,220 மருத்துவ படிப்பு இடங்களை பெற்றுள்ளனர். பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One